உக்ரைன் மீதான ரஷ்யா போர் தொடங்கி மூன்று மாதங்களுக்கும் மேலாக தொடர்ந்து வருகிறது. இதை தொடர்ந்து ரஷ்ய பிரதமர் விளாதிமிர் புதினின் உடல்நலம் குறித்து அவ்வபோது பல தகவல்கள் வந்த வண்ணம் இருக்கிறது. அந்த வகையில், உக்ரைனின் பாதுகாப்பு உளவுத்துறையின் தலைவரான கைரிலோ புடானோ (Ukraine military spy chief Kyrylo Budanov ) புதினின் உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாவும், அவரின் வாழ்நாள் இன்னும் சில காலம்தான் இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.


உக்ரைன் செய்தி நிறுவனமான ஸ்கை நியூசிற்கு அளித்த பேட்டியில் விளாதிமர் புதினின் உடல்நலம், அவரை கொல்ல மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் போன்ற பல தகவல்களை பகிர்ந்துள்ளார்.


புதின் உடல்நலம்:


ரஷ்ய பிரதமர் விளாதிமிர் புதின் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக அவர் நாளையே இறந்து விடுவார் என்பதெல்லாம் இல்லை. அவர் வாழ்நாள் இன்னும் சிறிது காலம் இருக்கிறது. புதினுக்கு பல்வேறு உடல்நல பாதிப்புகள் இருக்கிறது. புற்றுநோய், மன அழுத்தம், தைராய்டு உள்ளிட்டவைகளால் பாதிக்கப்பட்டுள்ளார். இது பலரும் விரும்பாத தகவலாக இருக்கலாம். ஆனால், இதுதான் உண்மை. புதின் இன்னும் கொஞ்சம் காலமே உயிர் வாழ்வார் என்று கைரிலோ புடானோ தெரிவித்திருக்கிறார்.


உலகத்தில் உள்ள நாடுகளை அழிக்கவும், ஆக்கிரமிக்கவும் புதின் திட்டமிட்டு செயல்படலாம். ஆனால், புதினின் மனநலம் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளது. புதின் குறிபிட்ட சிலரை தவிர யாரையும் தன் அலுவலகத்திலோ, வீட்டிலோ சந்திப்பதில்லை. அவர் மனிதர்களிடம் பேசுவதை, தொடர்பில் இருப்பதை குறைத்துவிட்டார். புதினின் உடல்நல கோளாறுகள் அவரின் அன்றாட செயல்பாடுகளை பாதித்துவிட்டது. இதனால் புதின் ஒரு இயல்பான, சாதாரண மனிதரைப் போல் இல்லை. புதினுக்கு பல உடல்நல கோளாறுகள் இருப்பதாகவும், அவை நிரூபிக்கும் அளவில் ஏதும் முயற்சிகள் நடக்கவில்லை என்றாலும், புதின் 2016-2017 காலக்கட்டத்தில் எங்கு பயணித்தாலும், மருத்துவக் குழுவினருடம் தான் செல்வார். 


2017-ல் புதின் ஐஸ் ஸ்கேட்டிங் விளையாடும்போது தவறி விழுந்துவிட்டார். புதின் ஒரு சிறந்த ஐஸ் ஸ்கேட்டிங் விளையாடுபவர். இவர் அப்போது கீழே விழுந்ததால், கடுமையாக காயம் ஏற்பட்டு பிசியோதெரபிஸ்ட் உதவியுடன் அதிலிருந்து மீண்டார். 





 


புதினை படுகொலை செய்ய முயற்சிகள்:


புதின் மீதான படுகொலை முயற்சி குறித்து கைரிலோ புடானோ தெரிவிக்கையில், “புதினைப் படுகொலை செய்ய ஒரு முயற்சி நடந்தது. ஆனால் அந்த முயற்சி தோல்வியுற்றது. இது வெகுநாள்களுக்கு முன்பு நடந்தது இல்லை. உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்த காலத்திலேயே இது நடந்தது.  கொலை முயற்சி எந்த சிக்கலும் இல்லாமல் சிறப்பாக நடந்தது. ஆனால் புதினுக்கு அறுவை சிகிச்சை செய்து அந்த திரவத்தை அப்புறப்படுத்திவிட்டார்கள் எனத் தகவல் கிடைத்தது. இது குறித்து செய்திகள் ஏதும் வெளியே வரவில்லை. ஆனால், அவரைக் கொல்ல முயற்சிகள் நடந்தது உண்மை” என்றார்.


மேலும், “ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினின் ஆட்சியைக் கவிழ்க்க பல்வேறு சதி நடக்கிறது.  அதைத் தடுக்க முடியாது. ஆ ரஷ்ய அதிபர் 2017-லிருந்து குறைந்தது ஐந்து கொலை முயற்சிகளிலிருந்து உயிர் பிழைத்துவிட்டார். ஆனாலும், அவர் தனது பாதுகாப்பைப் பற்றிக் கவலைப்படவில்லை" எனத் தெரிவித்துள்ளார்.


மேலும், புதின் பல்வேறு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என்பதை தன்னால் உறுதியாக சொல்ல முடியும் என்கிறார் கைரிலோ புடானோ.