விமான நிலைய கன்வேயர் பெல்ட்டில் தங்கள் பொருட்களுக்காக பயணிகள் காத்திருப்பதை யாரும் விரும்புவதில்லை. ஒரு நபர் எவ்வளவு அவசரப்பட்டாலும், கடைசியாக தங்கள் பொருட்கள் வரும் வரை நீண்ட நேரம் காத்திருக்க வேண்டும்.

அப்படி, நாம் காத்திருக்கும் அனைவரும் வெவ்வேறு வகையான பொருட்களை பார்க்கிறோம். இதில் சில உண்மையில் மற்றவற்றிலிருந்து தனித்து நிற்கின்றன. நாம் நம்முடைய பொருட்களை தேடினாலும், சில விஷயங்கள் உண்மையில் நம் கவனத்தை ஈர்க்கும்.

சடலம் போல் காட்சியளித்த பொருள்

அப்படி ஒரு சம்பவம் லண்டன் விமான நிலையத்தில் அரங்கேறியுள்ளது. விமான நிலையத்தில் பயணிகள் தங்களின் பொருட்களுக்காக காத்துக்கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பார்க்காத வகையில் ஒரு விசித்திரமான பொருள் தோன்றியது. ஒரு மனிதனின் சடலம்போல் அந்தப் பொருள் இருந்தது. இதனைக் கண்ட பயணிகள் சிலர் அதிர்ச்சியும், சிலர் ஆச்சரயமும் அடைந்தனர்.

காகிதத்தில் சுற்றப்பட்ட உயிரற்ற உடலைப் போலவே தோற்றமளித்தாலும், அது உண்மையில் ஒரு மேனிக்வின் விளக்கு என்று பின்னர் தெரியவந்தது. 

பயணிகள் அதிர்ச்சி

இருப்பினும், இது உண்மையான உடல் என்று நினைத்த விமான நிலையத்தில் மக்கள் மத்தியில் இந்த வீடியோ பெரும் பீதியை ஏற்படுத்தியது. இந்த காட்சி விமான நிலையத்தில் இருந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட்டார். அது தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த வீடியோ பார்த்த ஒருவர், “இது உண்மையாக இருந்தால், இந்த உலகம் செல்லும் வழியில் இது எனக்கு ஆச்சரியமாக இருக்காது” என்று பதிவிட்டார். மற்றொருவர், “ஒரு பயணிக்கூட ஏன், அதை யாரும் குத்தவோ, தொடவோ இல்லை? பிணமாகத் தோற்றமளிக்கும் பொருட்களை எப்படி அவர்கள் சரியாகப் புறக்கணிக்கிறார்கள் என்பது என்னைத் திகைக்க வைக்கிறது” பதிவிட்டார்.

வீடியோ

 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண