பணி இடங்களில் மனதளவிலான துன்புறுத்தல் நிகழ்வுகள் அதிகமாக நடைபெறுவதாக உலக அளவில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


உலக அளவில் உள்ள நிறுவனங்களில் பணியாளர்கள் பெரும்பாலும் உளவியில் ரீதியிலான வன்முறைகளை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். உலக அளவில் பணியிடங்களில் நடைபெறும் வன்முறை மற்றும் பணியாளர்கள் எதிர்கொள்ளும் துன்புறுத்தல் ஆகியவைகள் பற்றி தெளிவாக தெரிந்துகொள்ளும் முதல் முயற்சியாக ஆய்வு மேற்கொண்டுள்ளப்பட்டுள்ளது. குறிப்பாக, வேலைத் தேடி வேறு இடங்களுக்கு செல்பவர்கள், பெண்கள் ஆகியவர்களின் அனுபவங்களை ஆய்வின் முடிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.


121 நாடுகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் கிட்டத்தட்ட 75,000 பணியாளர்கள் பங்கேற்று தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இதில் சுமார் 22 சதவீதத்தினர் எதாவது ஒருவகையிலான வன்முறை நிகழ்வுகளை பணியிடங்களில் சந்தித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். நேற்று ஐ.நா. வெளியிட்டுள்ள ஆய்வில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது. ஐ.நா.சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labor Organization),  Lloyds Register Foundation மற்றும் Gallup ஆகிய மூன்று நிறுவனங்களும் மேற்கொண்ட ஆய்வில் ஒருவரது மோசமான பணிச்சூழல் அவர்களை எப்படி மாற்றுகிறது, எந்த வகையான பாதிப்புகளை ஏற்படுத்துகிறது என்பது பற்றி கண்டறியப்பட்டுள்ளது.


"பணி இடத்தில் வன்முறை மற்றும் துன்புறுத்தல் ஒரு பரவலான மற்றும் தீங்கு விளைவிக்கும் நிகழ்வு ஆகும்.  இது கடுமையான உடல் மற்றும் மனநல விளைவுகள் முதல் வருவாய் இழப்பு மற்றும் சமூக பொருளாதார இழப்புகள் வரை ஒருவருடைய வாழ்கையை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் வகையிலான பாதிப்புகளை ஏற்படுத்துவதாக 56 பக்கங்களை கொண்ட ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


ஆய்வுகளின் படி, பணி இடங்கள், நிறுவனங்களில் நடைபெறும் வன்முறைகளில் மூன்றில் ஒரு பகுதியினர் ஒன்றுக்கு மேற்பட்ட வடிவங்களை அனுபவித்ததாகக் கூறியுள்ளனர்.  மேலும் 6.3 சதவீதத்தினர் உடல், உளவியல் மற்றும் பாலியல் வன்முறை போன்ற  துன்புறுத்தல் ஆகிய மூன்று வடிவங்களையும் எதிர்கொண்டதாகக் கூறியுள்ளனர். 


கணக்கெடுக்கப்பட்டவர்களில் 8.5 சதவீதம் பேர் உடல் ரீதியான வன்முறை மற்றும் துன்புறுத்தலை அனுபவித்துள்ளதாக கூறியுள்ளனர். ஆண், பெண் என்ற பாலின பேதமின்றி அனைவரும் வன்முறையான சூழலை வேலை செய்யும் நிறுவனங்களின் சந்திப்பதாக தெரிவிக்கின்றனர். 
 6.3 சதவீதம் பேர் பாலியல் வன்முறை மற்றும் துன்புறுத்தலை அனுபவித்ததாக அறிக்கை கூறுகிறது. அவர்களில் 8.2% பெண்களும் மற்றும்  5 சதவீத ஆண்களும் வன்முறைக்கு ஆளாகியுள்ளனர். 


பணி இடங்களில் வன்முறை மற்றும் துன்புறுத்தல்களை எதிர்கொண்டவர்களில் 60 சதவீதத்திற்கும்  அதிகமானோர் "இது போன்ற துன்புறுத்தல் நிகழ்வுகள் தங்களுக்கு பலமுறை நடந்துள்ளதாகவும்.” குறிப்பிட்டுள்ளனர்.


இந்த ஆய்வில் பாலினம், இயலாமை நிலை, நாடு, இனம், தோல் நிறம் அல்லது மதம் ஆகியவற்றின் அடிப்படையிலான வன்முறைகளை எதிர்கொண்டுள்ளதாக பெரும்பாலோர் தெரிவித்துள்ளனர். மேலும், இதனால் பாகுபாட்டோடு நடத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதுபோன்ற வன்முறைகள், தீண்டாமை போன்ற நிகழ்வுகள் பணி இடங்களில் அதிகமாக நிகழ்வதாக ஆராய்ச்சி கண்டறிந்துள்ளது.


இந்த முடிவுகளில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகளுக்கு உதவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 




மேலும் வாசிக்க..


Teachers Appointment: இவர்கள் எல்லாம் ஆசிரியர் பணிக்குத் தகுதியானவர்களே அல்ல - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு