8 AM Headlines: காலை 8 மணி தலைப்புச் செய்திகள்..! இதுவரை உங்களைச் சுற்றி நடந்தது என்ன..?
Headlines Today: கடந்த 24 மணிநேரத்தில் நடந்த முக்கிய நிகழ்வுகளை தலைப்புச் செய்திகளாக கீழே காணலாம்.
Continues below advertisement

காலை 8 மணி தலைப்புச் செய்திகள்
தமிழ்நாடு:
Continues below advertisement
- சென்னை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த மாவட்ட ஆட்சியர்கள்.
- மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்த மாண்டஸ் புயல்; இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என வானிலை ஆய்வு மையம் கணிப்பு
- பேரிடர், அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு; எந்த மழை வந்தாலும் மக்களைக் காப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி.
- சென்னையில் பலத்த காற்றுடன் மழைப்பொழிவு; அதிகபட்சமாக காட்டுபாக்கத்தில் 16 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
- மாண்டஸ் புயலால் சென்னை காசிமேட்டில் 150 படகுகள் சேதம்; 3 படகுகள் கடலில் மூழ்கியது.
- மாண்டஸ் புயலால் சென்னையில் 300க்கும் மேற்பட்ட மரங்கள் வேரோடு சாய்ந்தது. இரவோடு இரவாக அப்புறப்படுத்திய தூய்மைப்பணியாளார்கள்.
- மாண்டஸ் புயலால் சென்னையில் பல்வேறு சாலையில் மழை நீர் தேக்கம்; சாலையில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து சென்றது.
- புயலின் போது முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிப்பு
- புயல் கரையைக் கடந்ததால் சென்னை கிழக்கு கடற்கரைச் சாலையில் போக்குவரத்துக்கு அனுமதி அளித்த காவல்துறை.
- கனமழை எச்சரிக்கை காரணமாக, இன்று நடைபெற இருந்த செமஸ்டர் தேர்வு ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
- புயல் பாதித்த பகுதிகளில் தடையின்றி பால் விநியோகிக்க அமைச்சர் நாசர் உத்தரவு.
- புயலால் சென்னைக்கு வரவேண்டிய 4 சர்வதேச விமானங்கள் ரத்து; 13 விமானங்கள் தாமதம்
இந்தியா:
Just In
Nellai: நெல்லையில் கொடூரம்.. பள்ளி மாணவன் தற்கொலை, உடலோடு குடும்பத்தினர் போராட்டம் - பேருந்துகள் எரிப்பு
TN weather Reoprt: சென்னையில் கொட்டிய கனமழை, இன்றைய நிலவரம் என்ன? எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட் - வானிலை அறிக்கை
Salem Power Shutdown: சேலம் மாவட்டத்தில் இன்று எங்கெல்லாம் மின் தடை?
"திராவிட மாப்பிள்ளைக்கு பிறந்தநாள்..." எம்.பி முதல் எம்.எல்.ஏ வரை வரிசை கட்டி வாழ்த்து..
"சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பது நமது கடமை" குடியரசுத்தலைவர் திரௌபதி முர்மு
வில்லனாக மாறிய அஜித்... அக்கா மாமனாருக்கு பாட்டில் குத்து - தஞ்சாவூரில் அதிர்ச்சி
- ஆளுநர் நியமனம் மற்றும் அதிகாரங்களில் மாற்றம் கொண்டுவர மாநிலங்களவையில் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்த திமுக, சிபிஎம் உறுப்பினர்கள்.
- குஜராத்தில் புதிய முதல்வரை தேர்ந்தெடுக்க எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. மீண்டும் பூப்[ஏந்திர பட்டேல் தெர்ந்தெடுக்க வாய்ப்பு.
- இமாச்சலத்தில் முதல்வரை தேர்ந்தெடுக்க காங்கிரஸ் தலைவருக்கு அதிகாரம் என தீர்மாணம் நிறைவேற்றிய காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள்.
உலகம்:
- மாணவர்கள் உட்பட இன்னும் 1,190 பேர் உக்ரைனில் உள்ளதாக பாராளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்.
- உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்திற்கு தள்ளப்பட்டார் எலான் மஸ்க்.
- பாகிஸ்தானில் பொருளாதார நெருக்கடி; துறைமுகத்தில் ரூ. 44.47 கோடி இறக்குமதி பொருட்கள் தேக்கம்
- இந்தோனேசியாவில் லேசான நிலநடுக்கம்; ரிக்டரில் 5.5 ஆக பதிவு
- உலகம் முழுவதும் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை 62.77 கோடியாக உயர்ந்துள்ளது.
விளையாட்டு:
- உலகக்கோப்பை கால் இறுதி ஆட்டத்தில் பலமான பிரேசிலை வெளியேற்றி அரையிறுதிக்குள் நுழைந்த குரோஷிய அணி, மற்றொரு ஆட்டத்தில் நெதர்லாந்தை பந்தாடிய அர்ஜெண்டினா அரையிறுதிக்கு முன்னேற்றம்.
- இந்தியா - வங்காளதேசத்துக்கு எதிரான மூன்றாவது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி இன்று நடக்கவுள்ளது.
Continues below advertisement
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.