காதலுக்காக அரசு குடும்ப மரியாதைகளையெல்லாம் உதறித்தள்ளிய ஜப்பான் இளவரசி மேகோ, கடும் எதிர்ப்பு மற்றும் தடைகளுக்கிடையே அவரது கல்லூரி நண்பர் கெய் கொமுரோவை அக்டோபர் 26 ல் திருமணம் செய்யவிருக்கிறார்.


ஜப்பான் அரண்மனை வழக்கப்படி அரசக் குடும்பம் இல்லாமல்  வெளி நபர்களைத் திருமணம் செய்தால் அவர்களுக்கு அரசுரிமை, சொத்து, மானியம் எதுவும் கிடையாது எனவும், மேலும் திருமணத்தின் போது அரண்மனையில் மேற்கொள்ளப்படும் எந்தவிதச் சடங்குகளையும் செய்யக்கூடாது என்ற நடைமுறை உள்ளது. இதனையெல்லாம் அறிந்துதான் அரண்மனைப்பெண்கள் வளர்ந்து வருகிறார்கள். ஆனால் இதனை மீறியும் சில சமயங்களில் அவர்கள் காதல் வயப்படும் போதும் தான் பிரச்சனைகளைச் சந்திக்கின்றனர். அப்படியொரு நிகழ்வு தான் ஜப்பானில் தற்போது நடைபெற்றுவருகிறது.





ஜப்பான் நாட்டின் பேரரசர் நருஹிட்டோவின் தங்கை மகள் மேக்கோ தன்னுடன் பல்கலைக்கழகத்தில் படித்த கெய் கொமுரோ என்பவரைக் காதலித்து வந்துள்ளார். ஆனால் இவரது காதலுக்குக் குடும்பத்தினர் எதிரப்புத் தெரிவித்து வந்த நிலையில் தான், “நான் இவரைத்தான் திருமணம் செய்துக்கொள்வேன் என்று உறுதியுடன்“ நின்றதோடு கடந்த 2017 ஆம் ஆண்டு அனைவரும் அறியும் படி நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.  இதனையடுத்து ஊடகங்கள் தினமும் இவர்களைப்பற்றி எழுத ஆரம்பித்து விட்டனர். அப்போது தான், இளவரசி திருமணம் செய்யவுள்ள கெய் கொமுரோவின் தாய்க்கும்,அவரது முன்னாள் காதலருக்கும் இடையே 26 லட்ச ரூபாய் பாக்கித் தொடர்பாகத் தகராறுகள் உள்ளதாகச் செய்திகள் வந்தன.


இதனால் கடந்த 2018 ஆம் ஆண்டு நடக்கவிருந்தத் திருமணம் நடைபெறாமல் போனதன் விளைவாக மன அழுத்தத்தில் இருந்து வந்தனர். இதனையடுத்து கெய் கொமுரா அமெரிக்காச் சென்று சட்டக்கல்லூரிகளில் படிக்கத்துவங்கினர்.  நான்கு ஆண்டுகளுக்குப்பிறகு மீண்டும் தற்போது ஜப்பான் திரும்பியுள்ளார் கெய் கொமுரா. தற்போது அனைத்துப்பிரச்சனையும் முடிந்த நிலையில் இளவரசி மேகாகவும், அவரது நண்பரும் சாதாரணக் குடும்பத்தைச்சேர்ந்த கெய் கொமுராவுக்கும் வருகின்ற அக்டோபர் 26 ஆம் தேதி திருமணம் செய்யவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திருமணம் அரண்மனை வழக்கத்திற்கு மாறாக, மிக எளியமுறையில் இந்த திருமணம் நடைபெறவுள்ளது. மேலும் அரண்மனைவிதிப்படி மேகா அரச குடும்பத்தை விட்டு வெளியேறுவதாக திருமணப்பதிவு ஆவணத்தில் குறிப்பிடப்படும் என தெரியவருகிறது.





மேலும் அரசு குடும்பத்தை விட்டு வெளியே சென்றாலும் இவர்களது எதிர்கால நலனைக்கருத்தில் கொண்டு சன்மானம் வழங்கப்படும். அந்தவகையில் இந்திய மதிப்பில் சுமார் 95 கோடி ரூபாயை இளவரசி மேகாவிற்கு சன்மானம் வழங்க அரண்மனை நிர்வாகம் முடிவெடுத்துள்ள நிலையில், “ எங்களுடைய காதல் மீது நம்பிக்கைக்கொண்டுள்ளதாகவும், எங்களுக்கு எந்த அரசு சன்மானமும் வேண்டாம்“ என தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகிறது. இச்செய்தி தற்போது சமூக வலைத்தளத்தில் பரவிவரும் வரும் நிலையில், தற்போது இளைஞர்கள்  கொண்டாடும் பெண்மணியாகவுள்ளார் மேகா.. இவர்களது திருமணத்திற்குப்பிறகு இந்தத் தம்பதியினர் அமெரிக்கச் செல்லவுள்ளது குறிப்பிடத்தக்கது.