பிரைட் மாதம் :
LGBT சமூகம் ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதத்தை பிரைடாக அதாவது பெருமையாக கொண்டாடுகிறது. இது LGBTQAI+ சமூகம் எதிர்கொள்ளும் போராட்டங்கள் மற்றும் பாகுபாடுகளை அங்கீகரிப்பதற்காகவும், சமூகத்தில் நேர்மறையான மாற்றங்களைக் கொண்டுவருவதற்காக நடத்தப்படுகிறது. பிரைட் மாதம் ஜூன் 1 ஆம் தேதி தொடங்கி ஜூன் 30 ஆம் தேதி முடிவடையும்.செப்டம்பர் 6, 2018 அன்று, 377வது பிரிவு அரசியலமைப்பிற்கு எதிரானது என்று உச்ச நீதிமன்றம் ஒருமனதாக தீர்ப்பளித்தது . அது மிகப்பெரிய வெற்றியாக பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
பிரைட் மாதத்தின் வரலாறு என்ன ?
1924 ஆம் ஆண்டில், மனித உரிமை ஆர்வலர் ஹென்றி கெர்பர் அமெரிக்காவில் மனித உரிமைகளுக்கான ஒரு சமுதாய அமைப்பை நிறுவினார், இது நாட்டின் முதல் ஓரின சேர்க்கை உரிமை அமைப்பாக மாறியது. ஓரினச்சேர்க்கையைப் பற்றிய தவறான புரிதல் மற்றும் தடைகளை உடைப்பதை இந்த அமைப்பு நோக்கமாகக் கொண்டுள்ளது. ஹென்றி கெர்பரும் அவரது இந்த போராட்டம் காரணமாக பலமுறை கைது செய்யப்பட்டார். அவ்வபோது LGBT சமுதாயத்தினருக்கு நடக்கும் சம்பவங்கள் , இந்த அமைப்பை தீவிரமாக செயல்பட ஊக்கிவித்தது எனலாம்.
பிரைட் கொடி :
1978 ஆம் ஆண்டில், பிரைட் கொடி கில்பர்ட் பேக்கரால் உருவாக்கப்பட்டது. இவர் தன்னை ஒரு ஓரினசேர்க்கையாளர் என வெளிப்படையாக சொல்லிக்கொண்டார். கொடியில் உள்ள வானவில் கோடுகள் எல்ஜிபிடி சமூகத்தில் உள்ள பல்வேறு பாலினங்களைக் குறிக்கின்றன. மேலும், கொடியில் உள்ள வண்ணங்களுக்கும் வெவ்வேறு அர்த்தங்கள் உள்ளன. சிவப்பு என்பது பாலினத்தையும், இளஞ்சிவப்பு என்பது பாலினத்தையும், ஆரஞ்சு என்றால் குணப்படுத்துவதையும், மஞ்சள் என்றால் சூரிய ஒளியையும், பச்சை என்பது இயற்கையையும், டர்க்கைஸ் கலையையும், இண்டிகோ என்றால் நல்லிணக்கத்தையும், வயலட் ஆவியையும் குறிக்கிறது. பிரைட் தாய் என்றும் அழைக்கப்படும் பிரெண்டா ஹோவர்ட், முதல் LGBT பிரைட் அணிவகுப்பை ஒருங்கிணைத்தார். இது பல நிகழ்வுகளின் தொடக்கத்திற்கு வழிவகுத்தது. பின்னர், ஒவ்வொரு ஜூன் மாதமும் நடத்தப்படும் வருடாந்திர LGBT கொண்டாட்டங்களாக மாறியது.
அங்கீகாரம் :
பிபிசியின் கூற்றுப்படி, உலகில் 28 நாடுகள் மட்டுமே ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்கின்றன, மேலும் 69 நாடுகளில் ஓரினச்சேர்க்கையை குற்றமாக கருதும் சட்டங்கள் உள்ளன.