இங்கிலாந்தில் கர்பிணி பெண் ஒருவர் ஆடர் செய்த சாண்ட்விச்சில் கத்தி இருந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சாண்ட்விச்சுக்குள் கத்தி :
இங்கிலாந்தின் சஃபோல்க் பகுதியை சேர்ந்த 21 வயது பெண் நெரிஸ் மொய்ஸ். இவர் கர்பிணியாக உள்ள நிலையில் , அதீத பசி எடுத்துள்ளது. இதனால் கோர்ல்ஸ்டன் ஹை ஸ்ட்ரீட்டில் உள்ள பிரபல ’சப்வே ’உணவகத்தில் பெண்ணின் கணவர் பெரிய அளவில் உள்ள சாண்ட்விச் ஒன்றை ஆடர் செய்திருக்கிறார். பசியுடன் பார்சலை பிரித்தவர்களுக்கு காத்திருந்தது பேரதிர்ச்சி . ஏனெறால் சாண்ட்விச் அடியில் மஞ்சள் நிறத்தில் மிகப்பெரிய காய்கறி வெட்ட பயன்படுத்தும் கத்தி ஒன்றும் இருந்திருக்கிறது.
ஃபேஸ்புக் வீடியோ :
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த இருவரும் , சாண்ட்விச்சிற்குள் கத்தி இருந்ததை வீடியோவாக எடுத்து ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவேற்றியுள்ளனர். இது குறித்து நெரிஸ் மொய்ஸ் கூறுகையில் “ நான் என் கணவருடன் இருந்தேன், நாங்கள் பசியுடன் இருந்தோம். நான் தற்சமயம் கர்ப்பமாக உள்ளேன், எப்பொழுதும் எனக்கு பசியாக உள்ளது. அதனால் எனது கணவர் தொலைபேசி மூலம் சப்வேயில் ஆடர் செய்தார். ஆடர் வந்த பிறகு பிரித்து பார்த்த எங்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது. உடனே எனது காதலர் சம்பந்தப்பட்ட சப்வேவிற்கு கால் செய்து , உங்களது மஞ்சள் நிற கத்தியை தொலைத்துவிட்டீர்களா என கேட்க ! அதற்கு அவர்கள் உண்மையாகவே இப்படி நடந்ததா என ஷாக் ஆனார்கள் “ என்றார்.
மன்னிப்பு கேட்காத உணவகம் :
பிரபல சப்வே உணவகத்தின் இப்படியான அலட்சியை போக்கை கண்டித்து பலரும் கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். சிலர்” நல்ல வேளை பிரித்து பார்த்தீர்கள் ..இல்லையென்றால் விபத்து ஏற்பட்டிருக்கும் நல்ல வேளை எதுவும் ஆகவில்லை “ என சம்பந்தப்பட்ட பெண்ணிற்கு ஆறுதல் தெரிவித்து வருகின்றனர். இரண்டு வாரம் ஆகியும் சம்பந்தப்பட்ட சப்வே கிளை , முறையான விளக்கமளித்ததாக தெரியவில்லை. இது குறித்து கூறிய மொய்ஸ் “ அவர்கள் எங்களிடம் ஒரு மன்னிப்பு கூட கேட்கவில்லை. அந்த கத்தி இன்னும் எங்களிடம்தான் இருக்கிறது “ என்றார். இந்த செய்தி இணையத்தில் வைரலானதை தொடர்ந்து சப்வே நிர்வாகம் மொய்ஸை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்புக்கொண்டதாக தெரிகிறது.
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்