2022-ஆம் ஆண்டுக்கான உலக நகரங்களின் உச்சி மாநாடு சிங்கப்பூரில் நடைபெற்று வருகிறது. இந்த  மாநாட்டில் முக்கியமாக சீனாவின் முதலீட்டில் உருவான கொழும்பு போர்ட் சிட்டி முன்னிலைப்படுத்தப்பட்டு விளம்பரம் செய்யப்பட்டு இருக்கிறது. இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்த உலகளாவிய நிகழ்வில், 90 நாடுகளை சேர்ந்த நகர தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகள் பங்கேற்று உள்ளனர். ஜூலை 31 ஆம் தேதி முதல் 2022  ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை சிங்கப்பூரின் மெரினா பே சாண்ட்ஸில் உலக நகரங்களில் உச்சி மாநாடு நடைபெறுகிறது.



இந்த உச்சி மாநாட்டில் சீன முதலீட்டிலான கொழும்பு போட் சிட்டி, இலங்கையை வாழ தகுந்த இடமாக பிரதிபலித்திருக்கிறது. போர்ட் சிட்டி கொழும்பு, தெற்காசியாவிலேயே மிகவும் வாழத் தகுதியான நகரமாக இருப்பதாக சிங்கப்பூர் மாநாட்டில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டிருக்கிறது.

 

அத்துடன் வாழ்க்கை வசதியை மேம்படுத்தும் வகையில் அதன் ஸ்மார்ட் சிட்டி , தொழில்நுட்பம் மற்றும் உறுதி தன்மையை மேம்படுத்துகிறது என உலக நாடுகளிடம் ஓர் புதிய விளம்பரத்தையும் அதேபோல் மக்களை ஈர்ப்பதற்கான ஒரு வாய்ப்பையும் இலங்கை சிங்கப்பூரில் உண்டாக்கி இருக்கிறது. சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் கொழும்பு போர்ட் சிட்டியின் நிர்வாக இயக்குனர் கலந்து கொண்டு அந்தத் திட்டம் பற்றிய பல்வேறு விஷயங்களை  முன் வைத்துள்ளார்.

 

குறிப்பாக சீனாவின் முதலீட்டில் உருவாக்கப்பட்ட இந்த போர் சிட்டி திட்டம் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு ஒரு காரணமாகவும் அமைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. கொழும்பு போர்ட் சிட்டி, சிறந்த      வர்த்தக,பொழுதுபோக்கு, மருத்துவம், கல்வி மற்றும் வாழ்க்கை முறை வாய்ப்புகளை வழங்கும் ஒரு முன்மாதிரி நகரமாக இருக்குமே கூறப்பட்டுள்ளது.

 

இந்த போர்ட் சிட்டி திட்டத்தின் ஊடாக இலங்கையை தெற்காசியாவில் மட்டுமன்றி உலகளாவிய ரீதியில் முன்னணி நாடாக மாற்றும்  வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக போட் சிட்டி நிர்வாகம் சிங்கப்பூர் உச்சி மாநாட்டில் விளக்கமளித்திருக்கிறது.

 

இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகி சென்று கொண்டிருக்கிறது. மிகவும் பொருளாதார நெருக்கடியில் மக்கள் சிக்கி தவிக்கிறார்கள். அவர்களுக்கான வருமானம் இல்லை ,போதிய ஊட்டச்சத்து உணவு இல்லை. இவ்வாறு இருக்கும் போது உலக நாடுகளுக்கு மத்தியில் இலங்கையை முன்னிலைப்படுத்தி அபிவிருத்தி திட்டங்களை மேற்கொள்ளவும், ஒரு பக்கம் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

 

இன்னொரு பக்கம் மக்களுக்கான நிவாரணங்கள் இன்னும் உரிய முறையில் பல பகுதிகளுக்கு செல்லவில்லை என்றும் கூறப்படுகிறது . வறுமைக்கோட்டின் கீழே லட்சக்கணக்கான மக்கள் வாழ்ந்து வருவதாக அண்மையில் புள்ளி விவரங்களும் தெரிவித்திருந்தன. ஆகவே இலங்கை அரசு  மக்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த தற்போது முன்னுரிமை கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.