செல்லப்பிராணிகள் என்றாலே அவர்களும் நம் குடும்பத்தில் ஒரு உறுப்பினர் போலவே நடத்துவது பலருக்குமான வழக்கம். பூனை, நாய், கிளி, முயல், மீன் என எந்த உயிராக இருந்தாலும், அவர்களுக்கென பிரத்யேக கவனிப்பு இருக்கும். காரணம். அவை நம மீது எல்லையில்லா அன்பை பொழிகின்றன. நம் குடும்பத்தில் ஒருவராகி போகும் நாய், பூனைகளின் வாழ்க்கைக்கு தேவையான அடிப்படை வசதிகள் முதல், நம அன்பின் வெளிபாடாக அவைகளை கொண்டாடுவதில் நமக்கு அவ்வளவு பிடிக்கும். இல்லையா?
செல்லப்பிராணி தூங்க தனி குட்டி ஃசோபா, சாப்பிட அழகான பவுல் உள்ளிட்டவற்றை பார்த்துப்பார்த்து செய்வோம் இல்லையா? குளிர்காலத்தில் அவர்களுக்காக சில ஃபேன்/ ஏ.சி. யை ஆஃப் செய்த கதைகளும் உண்டும். ஒரு கட்டத்தில் நம் நாய்/ பூனைகளின் மகிழ்ச்சியே முக்கியம் என்றாகிவிடுகிறது. இந்த விஷத்தைக் கேட்டால் நீங்கள் இன்னும் குஷியாகிவிடுவீர்கள்!
டோக்கியோ ஆடை உற்பத்தியாளர் ஒருவர் கால்நடை மருத்துவர்களுடன் இணைந்து வெப்பத்தைத் தணிக்க ஏதுவாக செல்லப்பிராணிகள் அணியக்கூடிய மின்விசிறியை உருவாக்கியுள்ளார். ஜப்பானிய ஆடை வடிவமைப்பு நிறுவனம் ஒன்று நாய்கள் மற்றும் பூனைகள் தங்கள் உடலை குளிர்ச்சியாக வைத்திருக்க உதவும் சிறிய ஃபேன்களை விற்பனை செய்ய தொடங்கியுள்ளது.
இந்த புதிய முன்னெடுப்பிற்கு காரணமா, கடந்த ஜூன் மாதத்தில் டோக்கியோவில் ஒன்பது நாட்கள் வெப்ப அலை தாக்கியது. அப்போது, வெப்பநிலை மிகவும் அதிகமாக இருந்தது. பொது மக்களே கடும் வெப்பத்தை தாங்க முடியாமல் தவித்தனர். அப்போது,கால்நடைகளின் நிலையை யோசித்த இந்த நிறுவனம் ஆய்வு மேற்கொண்டு நாய், பூனை அணியக்கூடிய வகையில் உடையில் சிறிய ஃபேன் ஒன்றை பொருத்தி ஒரு புதிய ட்ரேஸ்-ஐ தயாரித்து உள்ளது.
ஜூலை மாதத்திலிருந்து சுமார் 100 ஃபேன் உடைகளுக்கு ஆர்டர் கிடைத்துள்ளதாகவும், இது ஒன்றின் விலை 107 டாலர் ஆகும் என்றும் தெரிவித்துள்ளது.
மகப்பேறு காலத்தில் உள்ளவர்களுக்கு ஆடைகளை வடிவமைக்கும் பிராண்ட் ஸ்வீட் மம்மி ( Sweet Mommy ) என்ற நிறுவனம் நாய்கள் மற்றும் பூனைகள் அணிவதற்காக 85 கிராம் பேட்டரி மூலம் இயக்கப்படும் மின்விசிறியை உருவாக்கியுள்ளது. மின்விசிறி Mesh ஆடையுடன் இணைக்கப்பட்டு அவர்களின் உடலைச் சுற்றி காற்றை வீசுகிறது.
ஜப்பானின் கொளுத்தும் கோடையில், தங்களது ஃபர்களுடன் வெப்பதால் மிகவும் பாதிக்கப்படும் நாய்கள் மற்றும் பூனைகளுக்காக இது வடிவமைக்கப்பட்டுள்ளதாக ஸ்வீட் மம்மி நிறுவனத்தின் தலைவர் ரெய் உசாவா (Rei Uzawa) தெரிவித்துள்ளார்.
டோக்கியோ வரலாற்றிலேயே மிக நீண்ட வெப்ப அலையை ஜூன் மாதத்தில் பதிவு செய்தது. ஒன்பது நாட்களுக்கு 35 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருந்தது.
கோடை வெப்பத்தில் நடைபயிற்சி செய்யும்போது நாய்கள் குளிர்ச்சியாக இருக்கும் வகையில் மின்விசிறிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. (கோடை வெப்பத்தால் தனது செல்லப் பிராணியான Chihuahua சோர்ந்து போனதைப் பார்த்தது இந்த கண்டுபிடிப்புக்கு உந்துதலாக இருந்ததாக உசாவா கூறினார்.
"இந்த ஆண்டு கிட்டத்தட்ட மழைக்காலம் இல்லை, எனவே வெப்பமயமான கோடை நாட்கள் முன்னதாகவே வந்தன. அந்த வகையில், சந்தைக்கு ஏற்ற ஒரு தயாரிப்பை நாங்கள் உருவாக்கியுள்ளோம் என்று நினைக்கிறேன்," என்று அவர் கூறினார்.இந்த ஃபேன் டிரெஸ் ஐந்து வெவ்வேறு அளவுகளில் கிடைக்கும் என்றும் இது ஜப்பானிய பண மதிப்பில், 9,900 யென் என்றும் அவர் கூறியுள்ளார்.
செல்லப்பிராணிகள் அக்கறை கொண்டு உருவாக்கப்பட்டிருக்கும் இந்த ஐடியா நல்லா இருக்குல்ல?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்