இஸ்ரேலில் முன்னாள் பெண் சிறை பாதுகாவலர் பாலஸ்தீன கைதிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் உயர் அலுவலர்களால் பாலியல் அடிமையாக வைத்திருக்கப்பட்டதாகவும் புகார் எழுந்த நிலையில், இதுதொடர்பாக விசாரணை நடத்த அந்நாட்டு பிரதமர் ஞாயிற்றுக்கிழமை அன்று உத்தரவிட்டுள்ளார்.


 






கில்போவா சிறையில் கைதிகளால் பெண் காவலர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டதாக பல ஆண்டுகளாக இஸ்ரேலிய ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வருகின்றன.


ஆனால், கடந்த ஆண்டு செப்டம்பரில்தான் சிறை நிர்வாகம் குறித்து சர்ச்சை வெடித்தது. அதாவது, ஆறு பாலஸ்தீனிய கைதிகள் கில்போவாவில் இருந்து வடிகால் அமைப்பு மூலம் அவர்களின் அறைகளிலிருந்து சுரங்கப்பாதை மூலம் வெளியே தப்பி சென்றனர். இது உலகளாவில் பெரும் செய்தியாக மாறியது.


இச்சூழலில்தான், கில்போவா சிறையில் நடைபெற்ற பாலியல் விவகாரங்கள் குறித்து இஸ்ரேலிய ஊடகங்கள் தொடர் கட்டுரைகளை வெளியிட்டன. சிறை உயர் அலுவலர்களின் மேற்பார்வையில் பெண் பாதுகாவலர்கள் கைதிகளால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகி இருப்பது தெரியவந்தது.


 






கடந்த வாரம், தன்னை ஒரு முன்னாள் கில்போவா சிறை பாதுகாவலர் என்று அடையாளப்படுத்திக் கொண்ட பெண், பாலஸ்தீனிய கைதியால் தான் பலமுறை பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக இணையத்தில் குற்றம்சாட்டியிருந்தார்.


இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "மேலதிகாரிகளால் கைதிகளுக்கு பாலியல் அடிமையாக்கப்பட்டேன். நான் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக விரும்பவில்லை, ஆனால், மீண்டும் மீண்டும் விதி மீறல் நடைபெற்றது" என்றார்.


இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்ணின் சார்பாக தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த அவரின் வழக்கறிஞர் கிரண் பாரக், "இந்த மோசமான அனுபவத்தை தொடர்ந்து எனது தரப்புக்கு மனநல ஆலோசனை தேவைப்பட்டது" என்றார்.


இதுகுறித்து அமைச்சர்களிடம் பேசிய இஸ்ரேலிய பிரதமர் யாயர் லாபிட், "பாதுகாப்பு படை வீரர், பயங்கரவாதியால் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதை பொறுத்து கொள்ள முடியாது. இது அவசியம் விசாரிக்கப்பட வேண்டும். பாதுகாப்பு வீரருக்கு உதவி கிடைப்பதை நாங்கள் உறுதி செய்வோம்" என்றார்.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண