சீனாவில் நேற்று தொடங்கி நடைபெற்றுவரும் ஷாங்காய் ஒத்துழைப்பு உச்சிமாநாட்டில் பங்கேற்றுள்ள பிரதமர் மோடி, நேற்று சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் தனியாக பேச்சுவார்த்தை நடத்தியது மிகவும் முக்கியத்துவம் பெற்றது. இந்நிலையில், இன்று காலை தனது எக்ஸ் தள பக்கத்தில், ஜின்பிங் மற்றும் புதினுடன் சிரித்துப் பேசி மகிழ்ந்த தருணத்தை பதிவிட்டள்ளார் பிரதமர் மோடி. இது அமெரிக்காவிற்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தாமலா இருக்கும்.?

Continues below advertisement

பிரதமர் மோடியின் பதிவுகள்

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில், 20-க்கும் மேற்பட்ட உலகத் தலைவர்கள் பங்கேற்றுள்ளனர். இந்நிலையில், மாநாட்டிற்கு நடுவே, பல்வேறு தலைவர்களை சந்தித்து வருகிறார் மோடி. அந்த வகையில், மாநாடு நடைபெறும் வளாகத்தில் அதிபர் புதினை சந்தித்த மோடி, அதிபர் புதினை சந்திப்பது எப்போதுமே மகிழ்ச்சியான ஒரு தருணம் என பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், மற்றொரு பதிவில், சீன அதிபர் ஷி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் புதினுடன் இணைந்து நடந்து வருவது போலவும், மூவரும் சிரித்து பேசி மகிழும் தருணத்தையும் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், தியான்ஜின்னில் உரையாடல்கள் தொடர்கிறது, SCO மாநாட்டில் அதிபர் புதின் மற்றும் அதிபர் ஷி-யுடன் எனது முன்னோக்குகளை பகிர்ந்துகொண்டேன் என குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல், 12 உலகத் தலைவர்கள் ஒரே மேடையில் தோன்றிய தருணத்தையும் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி.

இந்நிலையில், மாநாட்டில் தான் பேசிய வீடியோவையும் பதிவிட்டுள்ளார் பிரதமர் மோடி. முன்னதாக, நேற்று சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் அவர் நடத்திய பேச்சுவார்த்தை மிகவும் முக்கியத்துவம் பெற்றது. அப்போது, இந்தியாவும், சீனாவும் நண்பர்களாக இருக்க வேண்டும் என்றும் இரு நாடுகளுக்கும் இடையேயான உறவை பலப்படுத்த வேண்டும், டிராகனும் யானையும் ஒன்றிணைய வேண்டும் என்பதுபோல் ஜின்பிங் பேசியது மிகவும் வைரலானது. இருவருக்குமிடையே 50 நிமிடங்களுக்கு மேல் பேச்சுவார்த்தை நடைபெற்ற நிலையில், இரு தலைவர்களும் தங்கள் எல்லை வேறுபாடுகளை தீர்த்து, ஒத்துழைப்பை வலுப்படுத்துவதாக உறுதி அளித்தனர்.

இந்நிலையில், இன்று புதினுடனும் பேச்சுவார்த்தை நடத்தும் பிரதமர் மோடி. அப்போது, ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் குறித்தும், ஜெலன்ஸ்கி தன்னிடம் வைத்த வேண்டுகோள் குறித்து பிரதமர் மோடி எடுத்துரைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.