பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக போலந்து சென்றுள்ளார். இரண்டு நாட்கள் போலாந்தில் இருக்கும் அவர் ஆகஸ்ட் 23 ஆம் தேதி உக்ரைன் தலைநகர் கீவ் செல்கிறார். இதற்காக ட்ரெயின் ஃபோர்ஸ் ஒன் என்றசொகுசு ரயில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் என்னென்ன சிறப்பம்சங்கள் இருக்கின்றன என்ற தகவலை இந்த தொகுப்பில் பார்ப்போம்.


மோடி பயணிக்கும் ரயிலின் சிறப்புகள்:


ட்ரெயின் ஃபோர்ஸ் ஒன் இன் உட்புறம் விருந்தினரை ஈர்க்கக்கூடிய அளவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. எக்சிகியூட்டிவ்-லெவல் வேலை மற்றும் ஓய்வெடுப்பதற்குத் தேவையான அனைத்தையும் கொண்ட மரத்தாலான அறைகள் இதற்குள் இருக்கின்றன.


இந்த ரயில் உள்ளேயே சிறிய கூட்டங்கள் நடத்தி கொள்ளலாம் அதற்காக ஒரு நீண்ட மேஜை, ஓய்வெடுக்க பட்டு சோபா, சுவரில் ஒரு டிவி, மற்றும் வசதியாக உறங்குவதற்கும் அருமையான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கிறது. ரயில் ஆர்வலரான பிடென் இந்த ரயில் 20 மணி நேரம் பயணித்திருக்கிறார். நான் பயணித்ததில் சிறந்த ரயில்களில் இதும் ஒன்று என்று கூறியிருந்தார். 


இந்த ரயில் முதன் முதலில்  2014 இல் கிரிமியாவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்காக அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்கு முன்னதாக இந்த ரயிலை அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் போன்ற உலகத் தலைவர்கள் தங்கள் கெய்வ் பயணங்களுக்கு பயன்படுத்தியுள்ளனர். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கியும் தனது சர்வதேச பயணங்களுக்கு அடிக்கடி ரயிலைப் பயன்படுத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


உக்ரைன் பயணத்தில் விவசாயம், உள்கட்டமைப்பு, மருந்துகள், சுகாதாரம் மற்றும் கல்வி, பாதுகாப்பு மற்றும் மக்களிடையேயான உறவுகள் உட்பட இந்தியா-உக்ரைன் குறித்து மோடி-ஜெலென்ஸ்கி பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றனர்.