philippines Earthquake: பிலிப்பைன்ஸ் நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.7 அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.
இந்தாண்டின் தொடக்கத்தில் இருந்தே, உலகின் பல்வேறு பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டு வருகிறது. இதனால், சில உலக நாடுகள் நிலைகுலைந்துள்ளதுடன், மற்ற நாடுகளும் பீதியடைந்துள்ளது. மத்திய கிழக்கு நாடுகளான துருக்கி மற்றும் சிரியாவில் கடந்த பிப்ரவரி 6ஆம் தேதி அதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில் சிக்கி 50 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் மரணம் அடைந்தனர். இதேபோல, கடந்த நவம்பர் மாதம் 3ஆம் தேதி, இந்தியாவின் அண்டை நாடான நேபாளத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 150க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவம் நாட்டையே அதிர வைத்தது
பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்:
இந்நிலையில், தற்போது பிலிப்பைன்ஸ் நாட்டில் தெற்கு பகுதியில் மண்டனொ தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த தீவை மையமாக கொண்டு 789 கிலோ மீட்டர் ஆழத்தில் நேற்று இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டின் நேரப்படி மாலை 4.14 மணிக்கு இந்த நிலநடுக்கம் உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.7 என்ற அளவில் பதிவாகி உள்ளது. மேலும், இந்த நிலநடுக்கம் 2 முதல் 3 வினாடிகள் வரை இருந்தது என அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கம் வீட்டில் இருந்து மக்கள் வெளியே வந்து சாலையில் தஞ்சம் அடைந்துள்ளனர். மேலும், பல கட்டடங்களில் விரிசல்கள் ஏற்பட்டுள்ளன. இதோடு, இல்லாமல் வணிக வாளங்கள் என மக்கள் கூடும் அதிகமான இடங்களில் இருந்து மக்கள் வெளியேறி சாலைகளில் ஆங்காங்கே தஞ்சம் அடைந்துள்ளனர். இந்த நிலநடுக்கத்தால் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை என்று உள்ளூர் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுவாக பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம் என்பது அடிக்கடி நிகழக்கக் கூடியது. இருப்பினும், நேற்று ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் அங்குள்ள மக்களை பீதியடை வைத்துள்ளது. 6.7 என்ற அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை.
இதுகுறித்து அங்குள்ள அதிகாரிகள் கூறுகையில், "6.7 ரிக்டேர் அளவுகோலில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதுவரை யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. ஆனால், வணிக வாளாக கட்டடங்கள் உட்பட அனைத்தும் சேதம் அடைந்துள்ளன. பாதுகாப்பிற்காக வணிக வளாகத்தில் இருக்கும் ஊழியர்களை வெளியேற உத்தரவிட்டோம். மேலும், இதுவரை சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை" என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க