பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரஃப் (79) உடல்நலக்குறைவால் துபாயில் காலமானார். துபாயில் உள்ள மருத்துவமனையில் நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்றுவந்த பர்வேஸ் முஷாரஃப் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
1943 - சுதந்திரத்துக்கு முன்பு டெல்லியில் பிறந்தவர் பர்வேஸ் முஷாரஃப். தேச பிரிவினையின்போது முஷாரஃப் குடும்பம், பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு இடம் பெயர்ந்தது. 1964ல் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்த முஷாரஃப் படிப்படியாக உயர்ந்து தலைமை தளபதியானார்.
அதை தொடர்ந்து, 1999 ம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் நவாஸ் ஷெரிப்பின் ஆட்சியை கலைத்து அந்நாட்டின் அதிபராக பதவியேற்று கடந்த 2008 வரை பொறுப்பு பகித்தார்.
பர்வேஸ் முஷாரஃப்:
1943 - சுதந்திரத்துக்கு முன்பு டெல்லியில் பிறந்தவர் பர்வேஸ் முஷரப். தேச பிரிவினையின்போது முஷரப் குடும்பம், பாகிஸ்தானில் உள்ள கராச்சிக்கு இடம் பெயர்ந்தது. 1964ல் பாகிஸ்தான் ராணுவத்தில் சேர்ந்த முஷரப் படிப்படியாக உயர்ந்து தலைமை தளபதியானார்.
அதை தொடர்ந்து, 1999 ம் ஆண்டு ராணுவ புரட்சி மூலம் நவாஸ் ஷெரிப்பின் ஆட்சியை கலைத்து அந்நாட்டின் அதிபராக பதவியேற்று கடந்த 2008 வரை பொறுப்பு வகித்தார். பர்வேஸ் முஷாரப் 1943 ஆகஸ்ட் 11 அன்று புதுதில்லியின் தர்யாகஞ்சில் பிறந்தார். 1947 ஆம் ஆண்டு அவரது குடும்பத்தினர் பாகிஸ்தானுக்கு செல்ல முடிவு செய்தனர். பிரிவினைக்கு சில நாட்களுக்கு முன்பு அவரது குடும்பத்தினர் அனைவரும் பாகிஸ்தானை அடைந்தனர். அவரது தந்தை சயீத் புதிய பாகிஸ்தான் அரசாங்கத்திற்காக வெளியுரவு துறை அமைச்சகத்தில் பணியாற்றத் தொடங்கினார்.
இதற்குப் பிறகு அவரது தந்தை பாகிஸ்தானில் இருந்து துருக்கிக்கு மாற்றப்பட்டார், 1949 இல் அவர் துருக்கி சென்றார். சில காலம் அவர் தனது குடும்பத்துடன் துருக்கியில் வசித்து வந்தார், அதே நேரத்தில் அவர் துருக்கிய மொழியைப் பேசவும் கற்றுக்கொண்டார். முஷாரப்பும் இளமையில் ஒரு வீரராக இருந்துள்ளார். 1957 இல், அவரது முழு குடும்பமும் மீண்டும் பாகிஸ்தானுக்குத் திரும்பியது. கராச்சியில் உள்ள செயின்ட் பேட்ரிக் பள்ளியிலும், லாகூரில் உள்ள ஃபார்மன் கிறிஸ்டியன் கல்லூரியிலும் பள்ளிப்படிப்பை முடித்தார்.
முஷாரப்புக்கு விதிக்கப்பட்ட மரணத்தண்டனை:
நவம்பர் 3, 2007 அன்று பாகிஸ்தானில் அவசரநிலையை அமல்படுத்தியதற்காகவும், டிசம்பர் 2007 நடுப்பகுதி வரை அரசியலமைப்பை இடைநிறுத்தியதற்காகவும் பர்வேஸ் முஷாரஃப் மீது டிசம்பர் 2013 இல் தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மார்ச் 31, 2014 அன்று முஷாரப் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு மரணத் தண்டனை விதிக்கப்பட்டது. 79 வயதான முஷாரப் 1999 முதல் 2008 வரை பாகிஸ்தானை ஆட்சி செய்தார். முஷாரப் 2016 மார்ச் முதல் துபாயில் வசித்து வந்தார்.
மோசமான உடல்நிலை:
முஷாரப் கடந்த ஆண்டு ஜூன் 10ம் தேதி அமிலாய்டோசிஸ் என்ற பாதிப்பு காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த பாதிப்பு படிப்படியாக அதிகரித்து உடலிலுள்ள உறுப்புகள் செயலிழக்க தொடங்கியது. நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவால் அவதிப்பட்டு வந்தநிலையில் முஷாரப் இன்று காலமானார்.