சிறியவர்கள் பெரியவர்கள் முதல் பலரும் விரும்பி சாப்பிட்டும் சிப்ஸ்களில் ஒன்று பெப்ஸி நிறுவனத்தின் லேஸ். இந்த லேஸ் தயாரிக்க தேவைப்படும் சிப்ஸை தயாரிக்க உருளை கிழங்கு விவசாயிகளிடம் பெற்று வருகிறது. ஆனால் இந்த வகையான உருளை கிழங்கினை லேஸ் நிறுவனத்திடம் ஒப்பந்தம் செய்தவர்கள் மட்டுமே பயிரிட முடியும் என்று இருந்தது. ஏனென்றால் இந்த வகை உருளை கிழங்கிற்கு பெப்ஸி நிறுவனம் பெடெண்ட் என்ற காப்புரிமையை வைத்திருந்தது. 


இந்நிலையில் இந்த காப்புரிமையை ரத்து செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பயிர் வகைகள் மற்றும் விவசாயிகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி பெப்ஸி நிறுவனத்தின் லேஸ் சிப்ஸ் தயாரிக்க எஃப்சி5 ரக உருளை கிழங்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்த உருளை கிழங்கு விதைகளை பெப்ஸி நிறுவனம் ஒப்பந்தம் செய்யும் விவசாயிகளுக்கும் மட்டும் அளித்து வந்தது. மற்ற விவசாயிகள் இதை பயிர கூடாது என்று கூறி வந்தது. இதைத் தொடர்ந்து கடந்த 2019ஆம் ஆண்டு குஜராத் மாநில விவசாயிகள் சிலர் மீது பெப்ஸி நிறுவனம்  வழக்கு தொடர்ந்தது. அந்த வழக்கிற்கு பெரியளவில் பிரச்னையை ஏற்படுத்தியது. அதன்பின்னர் இந்த விவகாரத்தை பேசி முடிவெடுத்து கொள்வதாக அந்த நிறுவனம் தெரிவித்தது. 


அதன்பின்னர் இது தொடர்பாக பயிர் வகைகள் மற்றும் விவசாயிகள் உரிமை பாதுகாப்பு ஆணையத்தில் முறையிடப்பட்டத்து. அப்போது விவசாயிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞர், “இந்தியாவில் பயிரின் விதைகளுக்கு எப்போதும் பெடெண்ட் காப்புரிமை அளிக்கப்பட்டதில்லை. அதற்கு இந்தியாவின் காப்புரிமை சட்டமும் வழி வகுக்கவில்லை” என்று கூறினார். 




இந்த விவகாரத்தின் வழக்கறிஞரின் வாதத்தை ஏற்ற ஆணையும் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது பயிரின் விதைகளுக்கு இந்தியாவில் காப்புரிமை அளிக்க முடியாது என்று தெரிவித்தனர். இந்த முடிவை குஜராத் மாநில விவசாயிகள் பெரிதும் வரவேற்றுள்ளனர். அதேசமயம் இந்த உத்தரவை ஆராய்ந்து வருவதாக பெப்ஸி நிறுவனம் கூறியுள்ளது. மேலும் இந்த உத்தரவை முழுமையாக ஆராய்ந்த பிறகு மேல் முறையீடு செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. 


அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாக கொண்டுள்ள பெப்ஸி நிறுவனம் 1989ஆம் ஆண்டு இந்தியாவில் லேஸ் சிப்ஸ் தயாரிக்கும் ஆலையை அமைத்தது. அப்போது முதல் எஃப்சி5 உருளை கிழங்கு விதைகளை இந்திய விவசாயிகளுக்கு கொடுத்து வருகிறது. இந்த எஃப்சி5 உருளை கிழங்கை பெப்ஸி நிறுவனம் 2016ஆம் ஆண்டு காப்புரிமைக்கு பதிவு செய்து காப்புரிமை பெற்றது குறிப்பிடத்தக்கது.  


மேலும் படிக்க:3 மாசமா சம்பளம் தரலைங்க... ட்விட்டரில் இம்ரான் கானை சம்பவம் செய்த தூதரக அதிகாரிகள் !