செர்பியா நாட்டில் பாகிஸ்தான் தூதரகம் ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில் பணியாற்றும் வரும் தூதரக அதிகாரி ஒருவர் பாகிஸ்தான் தூதரகத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில், ' பாகிஸ்தானில் முந்தைய சாதனைகள் அனைத்தையும் பணவீக்கம் மூலம் முறியடிக்க பட்டுவிட்டது. அரசு ஊழியர்களான நாங்கள் இன்னும் எத்தனை நாட்களுக்குதான் அமைதியாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் அவர்களே, உங்களுக்காக நாங்கள் கடந்த 3 மாதங்களாக சம்பளம் இல்லாமல் வேலை செய்து வருகிறோம். கல்வி கட்டணம் செலுத்தமுடியாமல் எங்கள் குழந்தைகள் பள்ளி களுக்கு செல்ல முடியாமலும், வாழ்க்கையை நடத்த முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
தொடர்ந்து, தீவிரவாதத்தின் மீது செலுத்தும் கவனத்தை, தனது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின் மீது பாகிஸ்தான் காட்டுவது தவறிவிட்டது. இதனால், அந்த நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து பண வீக்கம் அதிகரித்துள்ளது. வெளிநாடுகளில் உள்ள தனது நாட்டு தூதரக அதிகாரிகளுக்கு கூடசம்பளம் வழங்க முடியாத நிலை உள்ளதா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும், பிரதமர் இம்ரான் கானை கிண்டல் செய்து ஒரு சிலர் வீடியோ காட்சியையும் பதிவிட்டிருந்தனர். அதில், சோப்பு விலை உயர்ந்து விட்டால், அதை பயன்படுத்தாதே.. கோதுமை விலை குறைந்து விட்டால் அதை சாப்பிடாதே..' என்ற பாடலும் ஒளிபரப்பப்பட்டது.
இதுகுறித்து விளக்கமளித்த வெளியுறவு துறை அமைச்சகம், தங்களது நாட்டின்டிவிட்டர் பக்கத்தை ஒரு சில விஷமிகளால் ஹேக் செய்யப்பட்டு, பதிவு செய்யப்பட்டதாக தகவல் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்