கால்பந்து ஜாம்பவான் பீலே உடல்நலக் குறைவால் காலமானார். கால்பந்து பற்றி ஒரு அணு அளவு கூட தெரியாத நபர்களிடம் கால்பந்து பற்றி கேட்டால், அவர்கள் உச்சரிக்கும் வீரர்களில் மெஸ்ஸியும், ரொனால்டோவும் இருப்பர். இந்த இரு வீரர்கள் கால்பந்தை கடந்து உலகம் முழுவதும் அவ்வளவு புகழ் பெற்றவர்கள்.


இவர்கள் இருவருக்கும் முன்னதாகவே, தலைவனுக்கு தலைவனாக இருந்தவர்தான் பீலே. எல்லா காலத்திலும் கால்பந்து வீரர்களில் சிறந்த வீரராகவும், மூன்று முறை ஃபிபா உலகக் கோப்பை வென்ற ஒரே வீரராகவும் அறியப்பட்ட பிரேசில் கால்பந்து ஜாம்பவான் பீலே தனது 82 வயதில் காலமானார் என்று அவரது குடும்பத்தினர் நேற்று இரவு தெரிவித்தனர். 


உலகத் தலைவர்கள் இரங்கல்:


அமெரிக்க அதிபர் ஜோ பைடன்:


விளையாட்டால் உலகை பீலேவைப் போல வேறு யாராலும் ஒன்றிணைக்க முடியாது. சாதாரண பின்னணியில் இருந்து கால்பந்து ஜாம்பவானாக மாறிய கதை. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.



பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மெக்ரான்:






முன்னாள் அமெரிக்க அதிபர் பாரக் ஒபாமா


பீலே மிகச் சிறந்த விளையாட்டு வீரர். மக்களை ஒன்றிணைப்பதற்கான சக்தி விளையாட்டிற்கு இருப்பதை அவர் நன்குணர்ந்தவரர். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.


 






 


சசி தரூர்



கால்பந்து வீர்கள் இரங்கல்


நெய்மர்






 


கிறிஸ்டினா ரொனால்டோ


 






மெஸ்ஸி:






 


கேரள முதலமைச்சர் பினராயி விஜயன்






 


நடிகர் மோகன்லால் 










இந்திய விளையாட்டு துறை பிரபலங்கள்:


பீலேவின் மறைவு கால்பந்து விளையாட்டுக்கு மட்டுமல்ல உலகத்திற்கே பேரிழப்பு என்று முன்னாள் கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தெரிவித்துள்ளார்.






வீரேந்திர சேவாக்






 






தமிழ்நாடு முதலமைச்ச மு.க.ஸ்டாலின் 






பிரெசிலின் பொக்கிஷமான பீலே


பீலே தனது இளமை பருவத்தில் உள்ளரங்க லீக்குகளில் விளையாடினார், இறுதியில் 15 வயதில் சாண்டோஸ் எஃப்சியால் ஒப்பந்தம் செய்யப்பட்டார். 16 வயதிற்குள், பிரேசிலிய லீக்கில் அதிக கோல் அடித்தவராக மாறினார். பிரேசில் தேசிய தரப்பிலிருந்து பீலேவுக்கு அழைப்பு வந்தது. மான்செஸ்டர் யுனைடெட் போன்ற வெளிநாட்டு கிளப்புகள் பீலேவை கையொப்பமிடாதபடி பிரேசில் ஜனாதிபதி பீலேவை தேசிய பொக்கிஷமாக அறிவித்தார்.


கால்பந்திலிருந்து ஓய்வு


பின்னர் அவரது கால்பந்து வாழ்க்கையில், பீலே தொழில்முறை விளையாட்டுகளில் 1,000 கோல்களுக்கு மேல் அடித்தார். 19 நவம்பர் 1969 அன்று ரியோ டி ஜெனிரோவின் மரக்கானா மைதானத்தில் உள்ள வாஸ்கோடகாமாவில் பீலே தனது குறிப்பிடத்தக்க 1000வது கோலை அடித்தார். 1977 ஆம் ஆண்டில் பீலே தனது கால்பந்து வாழ்க்கையை முடித்துக்கொண்டு நியூயார்க் காஸ்மோஸிற்கு அமெரிக்க பட்டம் வாங்கித்தந்த பிறகு  ஓய்வு பெற்றார்.