இந்திய நிறுவனம் தயாரித்த இரும்மல் மருந்தை உட்கொண்டதால் 18 குழந்தைகள் உயிரிழந்ததாக உஸ்பெகிஸ்தான் சுகாதார அமைச்சகம் தெரிவித்த நிலையில் நொய்டா மருந்து நிறுவனத்தில் உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.


கடுமையான சுவாச நோயால் பாதிக்கப்பட்ட 21 குழந்தைகளில் 18 பேர் Doc-1 Max syrup எடுத்துக்கொண்டதால் உயிரிழந்துள்ளதாக உஸ்பெகிஸ்தானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.


இந்த மருந்தை Marion Biotech Private Limited என்ற நிறுவனத்தால் தயார் செய்யப்பட்டது. இந்த நிறுவனம் உஸ்பெகிஸ்தானில் 2012 இல் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.


நொய்டாவைச் சேர்ந்த மரியன் பயோடெக் தயாரித்த டாக்-1 மேக்ஸ் சிரப் மருந்தை இறந்த குழந்தைகள் உட்கொண்டதாக அந்நாட்டு சுகாதார அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.


கடுமையான சுவாச நோயால் பாதிக்கப்பட்ட 21 குழந்தைகளில் 18 பேர் Doc-1 Max syrup எடுத்துக் கொண்டதால் இறந்துள்ளனர் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது."இறந்த குழந்தைகள், மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, இந்த மருந்தை 2-7 நாட்களுக்கு ஒரு நாளைக்கு 3-4 முறை, 2.5-5 மில்லி அளவில், குழந்தைகளுக்கான மருந்தின் நிலையான அளவை விட அதிகமாக வீட்டில் உட்கொண்டது கண்டறியப்பட்டது. மேலும் மருந்தின் முக்கிய கூறு பாராசிட்டமால் என்பதால், டாக்-1 மேக்ஸ் சிரப்பை பெற்றோர்கள் சளிக்கு எதிரான மருந்தாக தங்கள் சொந்த அல்லது மருந்தக விற்பனையாளர்களின் பரிந்துரையின் பேரில் தவறாகப் பயன்படுத்தினார்கள்," என அந்த அறிக்கையில் இடம்பெற்றிருந்தது. 


 இந்த டாக்-1 மேக்ஸ் சிரப்பில் எத்திலீன் கிளைகோல் இருப்பதாக ஆரம்ப ஆய்வக ஆய்வுகள் காட்டுகின்றன. "இந்த பொருள் நச்சுத்தன்மை வாய்ந்தது, மேலும் 95% செறிவூட்டப்பட்ட சிரப்பில் சுமார் 1-2 மில்லி அளவு நோயாளியின் ஆரோக்கியத்தில் வாந்தி, மயக்கம், வலிப்பு, இருதய பிரச்சினைகள் மற்றும் கடுமையான சிறுநீரக செயலிழப்பு போன்ற தீவிர மாற்றங்களை ஏற்படுத்தும் என்று அமைச்சகம் சுட்டிக்காட்டியது. 


காம்பியாவில் கடுமையான சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தி 66 குழந்தைகளின் இறந்த சம்பவத்தில், தொடர்புடைய இந்திய மருந்து தயாரிப்பு நிறுவனமான மெய்டன் பார்மா தயாரித்த நான்கு "அசுத்தமான" இருமல் சிரப்களுக்கு உலக சுகாதார அமைப்பு (WHO) எச்சரிக்கை விடுத்த சில மாதங்களுக்குப் பிறகு தற்போது இந்த சம்பவம் உஸ்பெகிஸ்தானில் இடம்பெற்றுள்ளது.     


தொடர்ந்து இது போன்ற சம்பவங்கள் நடைபெறுவதால் நொய்டாவில் உள்ள மேரியன் பயோடெக் நிறுவனத்தில் மருந்து உற்பத்தி நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது.


மருந்து உற்பத்தி அனைத்தும் நிறுத்தப்பட்டு விட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மாண்டவியா தகவல் தெரிவித்துள்ளார்.