உலகிலேயே மிகப்பெரிய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அமெரிக்காவின் நாசா. விண்வெளியில் பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டுள்ள நாசா, தற்போது செயற்கை ஈர்ப்பு விசையில் மனித உடல் எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான ஆராய்ச்சியை மேற்கொண்டு வருகிறது.
இதற்காக அவர்கள் மேற்கொண்டு வரும் ஆராய்ச்சிக்காக தன்னார்வலர்கள் வரவேற்கப்பட்டுள்ளனர். இந்த ஆராய்ச்சிக்காக வரும் தன்னார்வலர்களுக்கு ரூபாய் 18 ஆயிரத்து 500 டாலர் ஊதியமாக வழங்கப்பட உள்ளது. அதாவது இந்திய மதிப்பில் ரூபாய் 15 லட்சத்து 31 ஆயிரத்து 920 ஆகும். இந்த தன்னார்வலர்களுக்கான வேலை என்பது என்னவென்றால் படுத்தே இருப்பது ஆகும்.
நாசாவும், ஜெர்மன் விண்வெளி ஆராய்ச்சி மையமும் இணைந்து மேற்கொள்ளும் இந்த ஆராய்ச்சிக்கு 12 ஆண்களும், 12 பெண்களும் தேவைப்படுகிறார்கள். இவர்களது வேலை என்னவென்றால் சாப்பிடுவது, விளையாடுவது, அவர்கள் அளிக்கும் வேலைகளை செய்வது என அனைத்தையும் படுக்கையில் இருந்தபடியே செய்ய வேண்டும். இதர நேரங்களில் நன்றாக தூங்க வேண்டும்.
இந்த தூங்கும் வேலையை 2 மாதங்களுக்கு செய்ய வேண்டும். இதற்கான பயிற்சி, மருத்துவ சிகிச்சை, 2 மாத பயிற்சி என மொத்தம் 89 நாள்களை இதற்காக செலவிட வேண்டும். நாசா மேற்கொள்ள உள்ள இந்த ஆராய்ச்சிக்கு தன்னார்வலர்களாக வருபவர்களுக்கு அவர்கள் விதித்துள்ள ஒரே நிபந்தனை ஜெர்மன் மொழி கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்பதே ஆகும்.
இந்த ஆராய்ச்சி ஜெர்மனியில் உள்ள கலோக்னியில் உள்ள ஜெர்மன் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் நடைபெற உள்ளது. இதற்காக பிரத்யே படுக்கைகள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க உள்ள நபர்களுக்கு 24 வயது முதல் 55 வயது வரை மட்டுமே இருக்க வேண்டும். இந்த ஆராய்ச்சி மூலம் விண்வெளியில் எடையில்லாத நிலையில் மனிதனின் செயல்பாடுகள், உடல்நலம் குறித்து தீவிரமாக ஆராய்ச்சி செய்யப்பட உள்ளது. இந்த ஆய்வின்போது எலும்புகள், தசைகள் மற்றும் தசைநார்கள் காயப்படுவது முற்றிலும் தவிர்க்கப்பட உள்ளது.
நாசாவின் இந்த தூங்கும் ஆராய்ச்சியில் பங்கேற்க பலரும் ஆர்வம் காட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், தகவல்களை தெரிந்து கொள்ள நாசாவின் அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.
மேலும் படிக்க: உலகளவில் உற்பத்தியாகும் உணவு... ஒரே ஆண்டில் மட்டும் இத்தனை பங்கு வீணாகிறதா..? வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்...!
மேலும் படிக்க: இந்து பெண் கொடூர கொலை...தோலுரிக்கப்பட்டு கொடூரம்...பாகிஸ்தானுக்கு பாடம் எடுத்த இந்தியா..!