Viral Video: ஜன்னலோர சீட்டில் ஜாலி பயணம் செய்த ’சூப்பர் மேன்’ கிளி.. வைரலாகும் வீடியோ..
கிளி ஒன்று தன் ஓனரின் கார் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து வீசும் காற்றை ரசித்தபடி பயணம் செய்யும் வீடியோ இணையத்தில் வைரலாகி உள்ளது.

பொதுவாக பறவைகள், விலங்குகள் வீடியோக்களுக்கு சமூக வலைதளங்களில் கிடைக்கும் வரவேற்பே தனி. வாழ்வின் குட்டி குட்டித் தருணங்களை விலங்குகளும் பறவைகளும் மகிழ்ந்து அனுபவிக்கும் வீடியோக்கள் பொதுவாக சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகின்றன.
வைரலான சூப்பர்மேன் கிளி
அந்த வகையில், கிளி ஒன்று தன் ஓனரின் காரின் ஜன்னல் ஓரத்தில் அமர்ந்து தலையை வெளியே நீட்டியவாறு வீசும் காற்றை ரசித்தபடி பயணம் செய்யும் வீடியோ தற்போது இன்ஸ்டாகிராமில் வைரலாகி உள்ளது.
Just In



சூப்பர் ஹீரோ உடை அணிந்தபடி இந்தக் கிளி ஜாலியாக அன்ன நடை போடும் இந்த வீடியோ, கடந்த பிப்ரவரி மாதமே ஷேர் செய்யப்பட்டுள்ளது. ஆனால் தற்போது இந்த வீடியோ மீண்டும் வைரலாகியுள்ளது.
இந்த க்யூட்டான கிளி வீடியோவுக்கு இன்ஸ்டாவாசிகள் ரசனையான கமெண்ட்கள் இட்டும், ஷேர் செய்தும் வருகின்றனர்.
மேலும் படிக்க: Black Hole : `ஒரு நொடியில் ஒரு பூமியை இழுக்கும் வேகம்!’ - அதிவேகமாக வளரும் மிகப்பெரிய கருந்துளையைக் கண்டுபிடித்த ஆய்வாளர்கள்!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்