கொரோனா பெருந்தொற்று நம் எல்லோர் வாழ்விலும் நிறைய மாற்றங்களை செய்துவிட்டது. அதில் குறிப்பிடத்தக்க ஒன்று என்றால் பணி, அலுவலகம் சார்ந்ததுதான். கொரோனா காலத்தில்தான் வீட்டிலிருந்து பணி செய்யும் (Work from home) நடைமுறை அறிமுகமானது. ஐ.டி. நிறுவனங்கள் உள்ளிட்ட பல நிறுவனங்கள் இரண்டு ஆண்டுகளாக வீட்டிலிருந்தே பணி செய்யும் வசதியை வழங்கியது. இப்போதும் சில நிறுவனங்கள் தங்கள் பணியாளர்களுக்கு வீட்டில் இருந்து வேலை செய்யும் ஆப்சனை கொடுத்திருக்கிறது. இதில் நல்லதும் கெட்டதும் இருப்பதாக பணியாளர்கள் மற்றும் நிறுவனங்கள் என இருவமே சொல்கின்றனர். வீட்டிலிருந்தே வேலை செய்வது கொஞ்ச காலங்களுக்கு நன்றாக இருந்தாலும், வீட்டில் அதிக நேரம் பணி செய்வது போன்று இருப்பதாக பணியாளர்கள் சிலர் உணர்கின்றனர்.  அலுவலகத்தில் இருந்தே வேலை பார்க்கிறேன் என்பது இவர்களுக்கு தேர்வு. நிறுவனங்களுக்கு வோர்க் -ஃப்ரம்- ஹோம் வழங்குவது மூலம் பல நன்மைகள் இருப்பதாக குறிப்பிடுகின்றனர்.


ஆனால், இப்போது உலகம் முழுவதும் இயல்புநிலை திரும்பிவருகையில் பலரும் அலுவலகம் சென்று பணி செய்வது தொடர்கிறது. இந்நிலையில் நெதர்லாந்து நாட்டில் வீட்டில் இருந்து பணி செய்வதை ஒர் சட்டப்பூர்வமான தனிமனித உரிமையாக்க திட்டமிடப்பட்டிருக்கிறது.


pro-European D-66 கட்சியைச் சேர்ந்த ஸ்டீவன் வான் வேயென்பர்க் (Steven van Weyenberg) மற்றும் கிரீன் கட்சியைச் சேந்த சென்னா  மாட்டோக் (Senna Maatoug), இருவரும் ப்ளூம்பர்க் இதழுலுக்கு அளித்துள்ள பேட்டியில், ஜூலை 3-ஆம் தேதி வீட்டிலிருந்து பணி செய்வதை தனிமனித உரிமைக்கும் சட்ட முன்வரைவை அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தாக்க செய்ய உள்ளதாக தெரிவித்தனர். 


இது குறித்து வெயென்பர்க் கூறுகையில், வீட்டில் இருந்து பணி செய்வதை உரிமையாக்குவதை சட்டமியற்றுவதற்கு பெரும்பாலானவர்களின் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.” என்றார்.


வீட்டிலிருந்து பணி செய்வது இப்போது பலரும் பேசிவரும் ஒன்றாக உள்ளது.


இந்நிலையில் இந்த வேர்க் ஃப்ரம் ஹோம் தொடர்பாக இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் நிறுவுனர் நாராயண மூர்த்தி, “என்னைப் பொறுத்தவரை வொர்க் ஃபரம் ஹோம் என்பது எப்போதும் பிடிக்காத ஒன்று. இதனால் நிறுவனத்தின் ஸ்திரத்தன்மை விரைவாக சிதைவு அடைந்துவிடும். ஏனென்றால் அனைவரும் வீட்டில் வேலை பார்ப்பதால் கடின உழைப்பு, ஊழியர்களுக்கு இடையே இருக்கும் உறவு, உரையாடல் ஆகியவை முற்றிலும் தடைப்பட்டு வருகிறது.” என்று ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.





குறிப்பாக இந்தியா மாதிரியான நாடுகளில் இந்த முறை எப்போதும் சரியாக இருக்காது. இங்கு ஒவ்வொரு இடங்களில் இணையதள சேவையின் வேகமாக சரியாக இல்லை. மேலும் பலருக்கு தங்களுடைய வீடுகளில் அலுவலகம் போல் வேலை செய்யும் வசதியும் இல்லை. ஆன்லைன் கல்வி குழந்தைகளின் மீது எந்தவித தாக்கத்தை ஏற்படுத்தியதோ அதேபோல் தான் இளைஞர்கள் மீது இந்த வொர்க் ஃபர்ம் ஹோம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இளைஞர் தங்களுடை வேலையில் எந்தவித புதிய விஷயங்களை கற்று கொள்ளாமல் இருந்துவிட வாய்ப்புகள் இருக்கிறது என்கின்றனர் பலர். 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண