காய்கறி வெட்டும் பெண்ணின் வீடியோவிற்கு 1.1 மில்லியன் லைக்ஸ் !

இளம் பெண் ஒருவர் காய்கறி வெட்டும் வீடியோ சமூகவலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

Continues below advertisement

பொதுவாக சமூக வலைதளங்களில் எந்தப் படங்கள் எந்த வீடியோக்கள் எந்த பதிவுகள் எப்போது வைரலாகிறது என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஏனென்றால், ஒரு சிறிய பதிவு கூட சில நேரத்தில் பலரை கவர்ந்து அதிகளவில் லைக்ஸ் மற்றும் ஷேர்களை பெறும். குறிப்பாக சாதாரண மக்களின் பதிவுகள் வைரலாகும் வாய்ப்பு குறைவு என்றாலும் அப்படி ஒருவேளை அது வைரலாகும் போது அதிகமான லைக்ஸ் பெற்று வருகிறது. 

Continues below advertisement

அந்தவகையில் பாகிஸ்தான் பகுதியில் பெண் ஒருவர் காய்கறிகளை வெட்டுவது போல் ஒரு வீடியோ ஒன்று இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டப்பட்டுள்ளது. அவரின் இந்த வீடியோவை பலரும் பார்த்து ரசித்து வருகின்றனர். அத்துடன் இந்த வீடியோவிற்கு 1.1 மில்லியன் பேர் லைக்ஸ் அளித்துள்ளனர். மேலும் இதை பலரும் பகிர்ந்து வருகின்றனர். 

 

இந்தப் பெண்ணின் வீடியோ வைரலாவது இது முதல் முறையல்ல ஏற்கெனவே இவர் ரொட்டி சூடும் வீடியோ 2 மில்லியன் பேர் பார்த்து ரசித்தனர். அந்த வீடியோவிற்கும் சுமார் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸூம் கிடைத்தது. மேலும் அந்த வீடியோ தொடர்பாக பலரும் தங்களின் கருத்துகளை தெரிவித்து வந்தனர். இந்த வீடியோவும் பலரிடம் இருந்து பெரும் வரவேற்பை பெற்றது. 

 

ஒரு சில அவர் ரொட்டி சுடும் அழகை ரசித்து பதிவிட்டு வருகின்றனர். மற்றவர்கள் இவரை ஒரு பாலிவுட் படத்தில் நடிகையாக நடிக்க வைக்கலாம் என்று கருத்து பதிவிட்டு வருகின்றனர். அதேபோல் தற்போது இந்த வீடியோவும் அதிக பேர் பார்த்து வருகின்றனர். இவர் தற்போது இரண்டாவது முறையாக பலரும் பார்க்கும் வகையில் வைரலாகி உள்ளார். இவர் கூடிய விரைவில் ஒரு பாலிவுட் படத்தில் நடித்தால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை. இப்படி சமூக வலைதளங்களில் எப்படி வீடியோக்கள் வைரலாகிறது என்பது மீண்டும் ஒரு புரியாத புதிராகவே தொடர்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. 

 

மேலும் படிக்க: தந்தைக்கு மகள் கொடுத்த பரிசு- வைரலாகும் தந்தையின் உணர்ச்சிகர வீடியோ !

Continues below advertisement
Sponsored Links by Taboola