லஷ்கர், ஜெஇஎம் ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொறுப்புக்குள் கொண்டுவர வேண்டும் என இந்தியா வலியுறுத்தியுள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளுக்கும் நிதி நடவடிக்கைகள் பணிக்குழுவுக்கும் இடையிலான புரிந்துணர்வு உடன்பாடு உள்பட தீவிரவாத நிதியுதவிக்கு எதிரான செயல்பாடுகளுக்கு சர்வதேசத் தரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் கூறியுள்ளார். தஜிகிஸ்தான் நாட்டின் துசான்பே நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. அதில் பங்கேற்றுப் பேசுகையிலேயே தோவல் இக்கருத்தை வலியுறுத்தினார். 


மேலும், எந்த வடிவத்தில் இருந்தாலும் பயங்கரவாதம் கண்டிக்கப்பட வேண்டியது என்றும் அவர் கூறினார். பயங்கரவாதச் செயல்களில் ஈடுபடுவோர் குறிப்பாக எல்லை கடந்த பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் நீதியின் முன் நிறுத்தப்பட வேண்டியது அவசியம் ஆகும். தனி நபரோ நிறுவனமோ ஐநா அமைப்பால் பயங்கரவாதத் தரப்பு என அறிவிக்கப்பட்டவர்களுக்கு எதிரான தடையை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் பேசினார். 


மேலும், “ பயங்கரவாதிகள் தற்போது பயன்படுத்தி வரும் புதிய நுட்பங்களைக் கண்காணிக்கவேண்டிய தேவை இருக்கிறது. ஆளில்லா விமானம் மூலம் ஆயுதக்கடத்தல், டார்க் வெப் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்துவது, செயற்கை நுண்ணறிவு, பிளாக்செயின் தொழில்நுட்பம், சமூக ஊடகம் ஆகியவற்றில் முதன்மையாக கவனம்செலுத்த வேண்டும்.  
ஆப்கனிஸ்தானில் கடந்த 20 ஆண்டுகள் பெற்ற பலனை அப்படியே பேணிக்காக்கவும் மக்கள் நலனை கவனிப்பதற்கு முன்னுரிமை அளிக்கவும் இப்போது அதிக அளவு தேவை இருக்கிறது என்று கூறிய தோவல், ஆப்கனில் இருக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் தொடர்புக் குழுவுக்கு, முழுமையாக, பின்னால் இருந்துகொண்டு துணையாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார். 


துசான்பேயில் நடைபெற்ற சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளின் கூட்டத்துக்குப் பின்னர், கூட்டறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. நம்பகமான தகவல் பாதுகாப்பு, சைபர் குற்றங்களுக்கு எதிரான கூட்டு நடவடிக்கைகள், உயிரியல் பாதுகாப்பு மற்றும் உணவுப் பாதுகாப்பு ஆகியவை தொடர்பாக, உறுப்பு நாடுகளிடையே கொரோனா காலகட்டத்தில் பரஸ்பர ஒத்துழைப்பு அவசியம் என்பதை பலரும் வலியுறுத்தினர். 


நவீனமான உலகத்துக்குக்கான சவால்கள், மிரட்டல்களை எதிர்கொள்வதில் உறுப்பு நாடுகளிடையே பிராந்திய ரீதியில் பாதுகாப்பு, நடுபுறவை வலுப்படுத்த, சாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் பிராந்தியரீதியிலான பயங்கரவாத எதிர்ப்புக் கட்டமைப்புக்கு முக்கிய இடம் இருக்கிறது என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 
அமைப்பின் தற்போதைய தலைவரான தஜிகிஸ்தான் அரசுத்தலைவர் ரஹ்மோன், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர்களின் இந்த சந்திப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்று குறிப்பிட்டார். சர்வதேச பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம், மதரீதியான அடிப்படைவாதம், தேசங்கடந்த கூட்டுக் குற்றம் அதிகரித்துவரும் அபாயம் குறிப்பாக ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள்கள் கடத்தல், ஆள் கடத்தல் ஆகியவை தொடர்பாக இந்தக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது என்றும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. றது என்றும் குறிப்பிட்டார்.