பாகிஸ்தானை சேர்ந்த நடிகை அலிசே ஷா காரில் புகைபிடிக்கும் வீடியோ வைரலானதை தொடர்ந்து, நெட்டிசன்கள் அவரை விமர்சித்து வருகின்றனர். 


பாகிஸ்தானின் பிரபல தொலைக்காட்சி நடிகையான அலிசே ஷா காரில் புகைப்பிடிப்பதை யாரோ ஒருவர் வீடியோ எடுத்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அதைப் பார்க்கும் பல நெட்டிசன்களும் அவர் கலாச்சாரத்தை சீர்குலைப்பதாக குற்றம் சாட்டி வருகிறார்கள்


பாகிஸ்தானிய நிகழ்ச்சிகள் இந்தியாவிலும் மிகவும் பிரபலமாக உள்ளன. எஹ்த்-இ-வஃபா, ஹூர் பாரி, ஜோ து சாஹே, மேரா தில் மேரா துஷ்மன் மற்றும் தானா பானா ஆகிய நிகழ்ச்சிகளில்  முக்கிய வேடங்களில் நடிகை அலிசே ஷா நடித்துள்ளார்.


இவரின் புகைபிடிக்கும் வீடியோ பார்த்த ஒருவர், “பெண்ணியத்தை ஊக்குவிக்கும் அதே வேளையில், பாகிஸ்தானியப் பெண்கள் வெகுதூரம் சென்றுவிட்டார்கள், அவர்கள் ஆடை அணிவது அல்லது அவர்களின் வாழ்க்கை முறை.. ஐயோ” எனப்  பதிவிட்டுள்ளார்.






சிலர் அலிசே ஷாவின் கடந்தகால வீடியோவைப் பகிர்ந்துள்ளனர். அதில் பாகிஸ்தானில் உள்ள பெண்கள் தங்கள் சொந்த விதிமுறைகளின்படி வாழ முடியாது என்று அவர் வாதிடுவதைக் காணலாம். பொது இடங்களில் அவர் புகைபிடிக்கும் வீடியோ மூலம், இது அவரது "பாசாங்குத்தனத்தை" காட்டுகிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். 






இதற்கிடையில், இது எல்லாம் மோசமாக இல்லை. அவருக்கு ஆதரவாக சிலர் களம் இறங்கினர். ஒரு நெட்டிசன், "அவருடைய அப்பாவாக இருப்பதை நிறுத்துங்கள்" என ட்வீட் செய்திருந்தார். நடிகை செய்த செயல் பாகிஸ்தானில் பேசுபொருளாக மாறியுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண