உலகம் முழுவதும் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா தொற்று பாதிப்பு இருந்து வருகிறது. இந்தச் சூழலில் தற்போது உலக நாடுகளில் உருமாறிய ஒமிக்ரான் தொற்று பரவி வருகிறது. இந்த தொற்றின் பரவலை கட்டுப்படுத்த இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் தீவிர கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர். இந்நிலையில் விமான பயணிகளுக்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அந்தக் கட்டுப்பாடுகளையும் மீறி ஒருவருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எப்படி அவருக்கு தொற்று ஏற்பட்டது? எங்கே தனிமை படுத்தப்பட்டார்?
சிகாகோ நாட்டிலிருந்து ஐஸ்லாந்து நாட்டிற்கு விமான ஒன்று பயணிகளுடன் சென்றுள்ளது. தற்போது கொரோனா பரவல் இருப்பதால் விமான பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்து. இதன்காரணமாக பயணிகள் அனைவரும் விமானத்தில் பயணிப்பதற்கு முன்பாக இரண்டு முறை ஆர்டிபிசிஆர் பரிசோதனைக்கு ஈடுபடுத்தப்பட்டனர். அதன்பின்பு அவர்கள் விமானத்தில் ஏற்றப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விமான பயணம் தொடங்கிய அரை மணி நேரத்திற்கு பிறகு ஃபோட்டியோ என்ற பெண்ணிற்கு லேசாக தொண்டை வழி ஏற்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து அவருக்கு ரேபிட் கொரோனா பரிசோதனை கிட் வழங்கப்பட்டுள்ளது. அந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. அவர் ஏற்கெனவே இரண்டு கொரோனா தடுப்பூசி மற்றும் பூஸ்டர் டோஸ் தடுப்பூசியை செலுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. இதன்காரணமாக அவருக்கு எந்தவித அறிகுறியும் இல்லாமல் தொற்று உறுதியாகியுள்ளது. இதை அவர் விமான பணிப் பெண்ணிடம் கூறியுள்ளார். இந்தச் செய்தியை அறிந்து முதலில் பதட்டம் அடைந்த இவர் பின்னர் அப்பெண்ணை தனியாக அமர வைக்க இடத்தை தேடியுள்ளார். எனினும் அந்த விமான முழுவதும் பயணிகள் இருந்துள்ளனர்.
இதன்காரணமாக அப்பெண்ணை கழிப்பறையில் தனிமைப்படுத்த வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. அடுத்த 5 மணி நேரத்திற்கு அந்தப் பெண் கழிப்பறையில் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார். அவர் இருந்த கழிப்பறையை யாரும் பயன்படுத்தாத வகையில் அறிவிப்பு ஒட்டப்பட்டிருந்தது. விமான பயணத்தின் பாதியில் பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன் அவர் 5 மணி நேரத்திற்கு மேலாக கழிப்பறையில் தனிமைப்படுத்தி கொண்டது பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்