பாகிஸ்தானின் பலூசிஸ்தானில் சென்ற ரயிலை, நேற்றைய தினம் கிளர்ச்சிக் குழுவானது கைப்பற்றியது. ரயில் பாதையில் குண்டுவீசித் தாக்கிய கிளர்ச்சின் குழுவானது ரயிலுக்குள் புகுந்து சிறைப்பிடித்த நிலையில் , தற்போது அதன் வீடியோ காட்சியானது வெளியாகியுள்ளது.
ரயில் சிறைபிடிப்பு:
பாகிஸ்தானின் தென்மேற்கு மாகாணத்தில் உள்ள பலூசிஸ்தானில் நேற்றைய தினம் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சென்று கொண்டிருந்தது. பலூசிஸ்தான் மாகாணத்தில் ஒரு சுரங்கப்பாதையின் நுழைவாயிலில் சென்றபோது கிளர்ச்சியாளர்கள் ரயில்பாதை மீது குண்டு எறிந்து கைப்பற்றினர். சுமார் 450 க்கும் மேற்பட்ட பயணிகள் அதில் இருந்ததாக கூறப்படுகிறது. மேலும் இன்னும் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்ற உறுதியான தகவல் தெரியவில்லை.
குண்டு ஏறியும் வீடியோ:
ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் சந்தேகிக்கப்படும் நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்திய சில மணி நேரங்களுக்குப் பிறகு, பலுசிஸ்தான் ஆதரவு குழுக்கள் ரயிலைக் கைப்பற்றிய காட்சிகளைக் கூறும் வீடியோ வெளியாகியுள்ளது. குண்டுவெடிப்பைக் காட்டும் முதல் வீடியோ இது என்றும் கூறப்படுகிறது.
இந்த காட்சியானது, மலைக்கு எதிராக அமைக்கப்பட்ட தரையில் பயணிகள் குழுமி இருப்பதையும், கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிகளை ஏந்தி, அவர்களைக் கண்காணிப்பதையும் காட்டுகிறது.
மோதல்:
கிளர்ச்சி குழுவுடன் போரிட்டு, பாகிஸ்தான் பாதுகாப்பு படைகள் ரயிலில் இருந்து 190 பணயக்கைதிகளை விடுவித்துள்ளதாக தகவல் தெரிவிக்கின்றனர். விடுவிக்கப்பட்ட பயணிகள், மலைப்பாங்கான நிலப்பரப்பு வழியாக மணிக்கணக்கில் நடந்து வந்ததாக, தப்பித்து வந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும், பலூச் விடுதலை இராணுவ கிளர்ச்சிக் குழுவுடன், பாகிஸ்தான் பாதுகாப்பு படைகள் ஈடுபட்ட சண்டையில் 27 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டதாகவும் தகவல் தெரிவிக்கின்றனர். பல பாகிஸ்தான் பாதுகாப்பு வீரகள் கொல்லப்பட்டதாகவும் கிளர்ச்சி அமைப்புகள் தகவல் தெரிவிக்கின்றன. 30க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வீரகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகம் தகவல் தெரிவிக்கின்றன. மேலும், சிறை பிடிக்கப்பட்ட ரயிலில் இருந்து, பலர் பணயக்கைதிகளாக மலைப்பாங்கான பகுதிக்குக் கடத்திச் சென்றிருப்பதாகவும் கூறப்படுகிறது.