ABP Nadu - Tamil News ABP Nadu - Tamil News ABP Nadu - Tamil News
ABP  WhatsApp
✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள
  • முகப்பு
  • செய்திகள்
  • உலகம்
  • Pak Social Media Ban: பாகிஸ்தானில் X-க்கு தடை! எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்

Pak Social Media Ban: பாகிஸ்தானில் X-க்கு தடை! எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்

Ad
செல்வகுமார் Updated at: 17 Apr 2024 07:39 PM (IST)

Pakistan Social Media Ban: X தளத்தின் மீதான தடையை ஒரு வாரத்தில் நீக்காவிட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றம் அதிரடி காட்டியுள்ளது.

Pak Social Media Ban: பாகிஸ்தானில் X-க்கு தடை! எச்சரிக்கை விடுத்த நீதிமன்றம்

X தளத்தின் மீதான தடையை நீக்க நீதிமன்றம் உத்தரவு; image credits: @pixabay

NEXT PREV





பாகிஸ்தானில் உள்ள X தளத்தின் ( முன்பு Twitter ) பயனர்கள், கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து எலோன் மஸ்க்கிற்கு சொந்தமான தளத்தை அணுகுவதில் சிரமங்களை எதிர்கொண்டனர்.  

 

X தளம் முடக்கம்:


கடந்த பிப்ரவரி மாதம், பொதுத் தேர்தலில் மோசடி நடைபெற்றதாக கூறி, சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் கட்சியானது, நாடு தழுவிய போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்தது. இதையடுத்து, போராட்டத்தை கட்டுப்படுத்தும் வகையில் X தளம் முடக்கப்பட்டதாக தகவல் வெளியானது.

 

இந்நிலையில், தற்போது X தளம் முடக்கப்பட்டது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு வந்தது. அப்போது, இன்று புதன்கிழமையன்று எழுத்துப்பூர்வமாக அரசு சார்பில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டதாவது, ஆம் X தளத்தை முடக்கினோம். பாதுகாப்பு காரணங்களுக்காக முடக்கினோம் என தெரிவிக்கப்பட்டது. 

 

மேலும், தெரிவித்துள்ளதாவது "முக்கியமான பிரச்னைகளை தீர்ப்பதில் பாகிஸ்தான் அதிகாரிகளுடன் ஒத்துழைக்க சமூக ஊடக நிறுவனமான X தயக்கம் காட்டியதாகவும் அமைச்சகம் குற்றம் சாட்டியது.  

 

அப்போது இம்ரான் கட்சியினர் போராட்டம் நடத்தியது குறிப்பிடத்தக்கது. அவர்களை ஒடுக்கத்தான் தடை செய்யப்பட்டதாக விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

நீதிமன்றம் உத்தரவு:


இதையடுத்து தளம் முடக்கப்பட்டது இரண்டு மாதங்களுக்கும் மேலாக, நீடித்த நிலையில், ஒரு வாரத்திற்குள் X தளத்தின் மீதான தடையை நீக்குமாறு பாகிஸ்தான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. 



மேலும், ஒரு வாரத்திற்குள் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஒருவார காலத்துக்குள் நடவடிக்கை எடுக்க தவறினால், நீதிமன்றம் உரிய நடவடிக்கை எடுக்கும் என தெரிவித்தது.  

 

Also Read: பாகிஸ்தான் குறித்து வாய் விட்ட ராஜ்நாத் சிங்: அமெரிக்கா பரபர கருத்து! 





Published at: 17 Apr 2024 06:58 PM (IST)
Tags: Social media PAKISTAN X
Read today's latest news (Latest News) the country's most trusted news channel on ABP News - which puts the nation ahead.

- - - - - - - - - Advertisement - - - - - - - - -

About us | Advertisement| Privacy policy
© Copyright@2025.ABP Network Private Limited. All rights reserved.