பாகிஸ்தானில் உள்ள சிந்து மாகாண முதலமைச்சர் சையத் முராத் அலி ஷா, இந்து மக்களுக்கு தீபாவளியன்று ‘ஹேப்பி ஹோலி’ வாழ்த்துகளைத் தெரிவித்தார். அந்த வாழ்த்து நீக்கப்பட்டாலும், அந்த செய்தி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி, நெட்டிசன்களின் கோபத்தை ஈர்த்தது.
உலகம் முழுவதும் உள்ள இந்துக்கள் நேற்று தீபாவளியை கொண்டாடினார்கள். அந்த நாளில், பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் உட்பட உலகம் முழுவதும் உள்ள உலக தலைவர்கள் தீபாவாளியை கொண்டாடிய அனைவருக்கும் வாழ்த்து தெரிவித்தனர். இந்த நிலையில், சிந்து மாகாண முதலமைச்சர் சையத் முராத் அலி ஷாவின் அலுவலகம் மக்களுக்கு தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவிக்க ஒரு ஹோலி புகைப்படத்தை ஷேர் செய்தது. அதில் முதலமைச்சர் பல கலர்களுடன் போஸ் கொடுத்தார்.இந்த ட்வீட் நீக்கப்பட்டாலும், ட்வீட்டின் ஸ்கிரீன் ஷாட்கள் ஆன்லைனில் பரவலாகப் பகிரப்பட்டு விமர்சனங்களை ஈர்த்தன.
முதல்வர் இந்த ட்வீட் குறித்து மூத்த பாகிஸ்தானிய பத்திரிகையாளர் முர்தாசா சோலங்கி, “பாகிஸ்தானில் இந்துக்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளுடன் சிந்துவில் அதிக எண்ணிக்கையிலான இந்துக்கள் உள்ளனர். சிந்துவில் உள்ள முதலமைச்சர் அலுவலக ஊழியர்களுக்கு தீபாவளிக்கும் ஹோலிக்கும் வித்தியாசம் தெரியவில்லை என்றால் மட்டுமே ஒருவர் நிலைமையை நினைத்து வருத்தப்பட முடியும். உண்மையில் வருத்தமாக இருக்கிறது’ பதிவிட்டார்.
முதலமைச்சர் அலுவலகம் பின்னர் சிறுபான்மையினருக்கான அவர்களின் ஆதரவை கோடிட்டுக் காட்டி தீபாவளி வாழ்த்துக்களைத் தெரிவித்து சில ட்வீட்களை வெளியிட்டாலும், பல விமர்சனங்களை சந்தித்தன.
“சிந்து முதல்வர் சையத் முராத் அலி ஷா, இந்து சமூகத்தினருக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். தீபாவளி மகிழ்ச்சி மற்றும் ஒளிகளின் திருவிழா என்று சிந்து முதல்வர் சையத் முராத் அலி ஷா கூறுகிறார்” என்று பிரதமர் அலுவலகம் டிவீட் செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்