பாகிஸ்தானில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்றுக்கு வெளியே கர்ப்பிணி பெண்ணை பாதுகாவலர் ஒருவர் எட்டி உதைக்கும் சிசிடிவி காட்சி சமூகவலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


 






அந்த பெண்ணை காவலாளி ஒருவர் காலணிகளை கொண்டு உதைப்பதைப் பார்த்த போலீசார் அவரை கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண் கட்டிடத்திற்கு வெளியே மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.


சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில், அந்த பெண்ணை அறைவதற்கு முன்பு, அந்த பெண்ணுடன் காவலாளி வாக்குவாதம் செய்கிறார். அந்த பெண் தரையில் விழுந்து எழுந்து நிற்க முயல்கிறார். பின்னரும், காவலர் பெண்ணின் முகத்திலேயே உதைக்கிறார். 


கராச்சியில் நோமன் கிராண்ட் சிட்டியில் உள்ள அடுக்குமாடி கட்டிடத்தில் பணிப்பெண்ணாக பணிபுரிந்து வருவதாக பாதிக்கப்பட்ட பெண் சனா கூறியுள்ளார். இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "ஆகஸ்ட் 5 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில், மகன் சோஹைலிடம் தனக்கு உணவு கேட்டேன்


இதையடுத்து, எனது மகன் அடுக்குமாடி குடியிருப்பில் நுழைய முயன்றபோது, ​​குடியிருப்பு வளாகத்தின் பாதுகாவலர்களான அப்துல் நசீர், ஆதில் கான் மற்றும் மஹ்மூத் கலீல், அவரை உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. நான் கீழே வந்து விசாரித்தேன். அப்போது, ஆதில் ஆத்திரம் அடைந்து என்னை திட்டினார். என்னை அடிக்கும்படி பாதுகாவலரிடம் கூறியுள்ளார். நான் 6 மாத கர்ப்பிணி. அவர் அடித்ததில் வலியால் மயங்கி விழுந்தேன்" என்றார்.


354 (ஒரு பெண்ணின் சீர்குலைக்கும் நோக்கில் தாக்குதல் அல்லது குற்றவியல் பாலியல் வன்கொடுமை), 337Ai (எந்தவொரு நபரையும் புண்படுத்தும் நோக்கத்துடன் எந்தவொரு செயலிலும் ஈடுபடுதல்) ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறையினர், முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளனர். 


இச்சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், சிந்து மாகாண முதலமைச்சர் முரத் அலி ஷா, "பாதுகாவலர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்த அறிவுறுத்தியுள்ளேன். அந்தப் பெண்ணிடம் கைகளை உயர்த்தி வன்முறையில் ஈடுபடும் துணிச்சல் காவலருக்கு எப்படி வந்தது? விசாரணை தொடங்கப்பட்டு காவலாளி, காவலில் எடுக்கப்பட்டுள்ளார்" என்றார்.


ஜூன் மாதத்தில் பாகிஸ்தானில் மொத்தம் 157 பெண்கள் கடத்தப்பட்டுள்ளனர். 112 பெண்கள் உடல் ரீதியான தாக்குதலுக்கு ஆளாகியுள்ளனர். 91 பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர்.