அரசு ரகசியங்களை கசியவிட்ட குற்றத்திற்காக பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு (Imran Khan) ஜாமின் வழங்கப்படுள்ளது.
தோஷாகானா வழக்கில் கைது:
இம்ரான் கான், பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன். பிறகு, தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். கடந்த 1996-ம் ஆண்டில் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியை (Pakistan Tehreek-e-Insaf (PTI) ) தொடங்கினார். 2018-ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் இம்ரான் கான் தலைமையிலான கட்சி ஆட்சியைப் பிடித்தது. நாட்டின் 22-வது பிரதமராக இம்ரான் கான் பதவியேற்றார். ஆனால், அவரால் நீண்ட காலம் பதவியில் நீடிக்க முடியவில்லை. விலைவாசி உயர்வு, கடும் பொருளாதார நெருக்கடி ஆகியவற்றை சந்தித்தது பாகிஸ்தான். நாடே நெருக்கடியான நிலையில் இருந்தபோது, இம்ரான் கான் அரசுக்கு அளித்து வந்த ஆதரவை கூட்டணி கட்சிகள் திரும்ப பெற்றன. இதனால், 2022 ஏப்ரலில் இம்ரான் கான் ஆட்சி கவிழ்க்கப்பட்டது.
இம்ரான் பதவிகாலத்தில் வெளிநாட்டு தலைவர்கள் வழங்கிய விலை உயர்ந்த பரிசு பொருட்களை பாதுகாக்கும் தோஷ்கானாவிடமிருந்து (Toshakhana) அவற்றை மலிவு விலையில் விற்பனை செய்தது, அரசின் முக்கிய வழ கசிய விட்டது, அல்காதிர் அறக்கட்டளை முறைகேடு உள்ளிட்டவைகளுக்காக அவர்மீது வழக்கு தொடரப்பட்டது. .இம்ரான் கான் மீது ஊழல் வழக்கு நிரூபணம் ஆகியுள்ளது. ஊழல் குற்றத்திற்காக இவர் கைது செய்யப்பட்டார். பண மோசடி வழக்கிலும் ஊழல் வழக்கிலும் சிக்கி தற்போது ராவல்பிண்டி சிறையில் உள்ளார். 2023-ம் ஆண்டு ஆக்ஸ்ட், 5 மாதத்தில் இருந்து சிறையில் இருக்கிறார்.
Toshakhana 2.0 வழக்கில் இம்ரான் கானுக்கு நிபந்தனை பிணை வழங்கியுள்ளது இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம். இம்ரான் கான் தரப்பினர் ஜாமின் வழங்க வேண்டும் என்று மேல்முறையீடு செய்திருந்தனர். இந்த வழக்கு நீதிபதி 'Miangul Hassan Aurangzeb' தலைமையில் விசாரணைக்கு வந்தது. பாகிஸ்தான் ரூபாயில் 1 மில்லியன் தொகை மதிப்பில் இரண்டு பிணைப் பத்திரம் மற்றும் நிபந்தனையுடன் ஜாமின் வழங்கியுள்ளார். பிணை வழங்கப்பட்டாலும் இம்ரான் கான் விசாரணையின்போது நேரில் ஆஜர் ஆக வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
இம்ரான் கானின் மனைவி கடந்த அக்டோபர், 24 ம் தேதி பிணை வழங்கப்பட்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
இந்த முறை இம்ரான் கானுக்குப் பிணை வழங்கப்பட்டுள்ளதால் கட்சியினர் கொண்டாட்டத்தில் இருக்கிறனர். இருப்பினும் அவர் மீது பல்வேறு வழக்குகள் இருப்பதால் அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவாரா என்பது விரைவில் தெரிய வரும். இது தொடர்பாக கட்சியினர் தெரிவித்துள்ளதில், “ இந்த முறையும் இம்ரான் கான் விடுவிக்கப்படவில்லை என்றால் நவம்பர் 24-ம் தேதி போராட்டம் நடத்தப்படும்.” என்று தெரிவித்துள்ளனர்.