இந்தியாவைவிட பாகிஸ்தான் வளர்ச்சி அடையவில்லை என்றால், "என் பெயர் ஷெபாஸ் ஷெரீப் அல்ல" என்று பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீஃப் தெரிவித்துள்ளது பெரும் பேசும் பொருளாகி வருகிறது.


பாகிஸ்தானின் பிரதமர் ஷெபாஷ் ஷெரீஃப், நேற்றைய தினம் சனிக்கிழமையன்று, ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றினார். டேரா காஜி கான் பகுதியில் பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்து, பொதுமக்களிடையே உரை நிகழ்த்தினார். அப்போது,  பாகிஸ்தானை ஒரு சிறந்த தேசமாக மாற்றுவேன் என்று சபதம் செய்தார்.


“ வளர்ச்சியில், இந்தியாவை விட பாகிஸ்தான் முன்னேறவில்லை என்றால், என் பெயர் ஷெபாஸ் ஷெரீப் இல்லை. நாம் பாகிஸ்தானை ஒரு சிறந்த நாடாக உருவாக்கி, இந்தியாவை விட வளர்ச்சியில் முன்னேறுவோம்.






HUM News  செய்தியின்படி, பாகிஸ்தானின் எதிர்காலம் சிறப்பானதாக இருக்கும், அதற்காக வளர்ச்சிப் பாதை நோக்கி வழிநடத்துவதாகவும் பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஷ் ஷெரீஃப் உறுதியளித்திருக்கிறார். 


மேலும், தனது தலைமையின் கீழ், பிற நாடுகள் மற்றும் அமைப்புகளிடம் கடன்களை நம்பி இருப்பதை விட, சுயமான, தற்சார்பான, தன்னிறைவான பொருளாதாரத்தை உருவாக்குவதில் பாகிஸ்தான் கவனம் செலுத்தும் . 
மேலும், நாட்டின் சமீபத்திய பணவீக்கத்தை சுட்டிக்காட்டிய ஷெரீப், தனது அரசாங்கம் பொறுப்பேற்ற போது 40 சதவீதமாக இருந்த பணவீக்கம் இன்று வெறும் 2 சதவீதமாக குறைந்துள்ளதாகக் ஷெபாஷ் ஷெரீஃப் கூறினார்.


Also Read: Pakistan Moon: நிலவுக்கு விண்கலத்தை அனுப்பும் பாகிஸ்தான்: நல்ல பெயரை சொன்னால் 1 லட்சம் பரிசு!