பிரதமர் இம்ரான் கான் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் நாடாளுமன்றத்தை கலைத்தார் அந்நாட்டு அதிபர் ஆரிப் ஆல்வி.


பாகிஸ்தானுக்கு தேர்தல் நடத்தப்படும் என்று அதிபர் அறிவித்துள்ளார். பாகிஸ்தானில் 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 


பாகிஸ்தானில் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசை கலைக்க வேண்டும் என நாடாளுமன்றத்தில் எதிர்கட்சிகள் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தனர். தொடர்ந்து ஆளும் கட்சிக்கு எதிராக நாடாளுமன்றத்தில், எதிர்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தையும் நிறைவேற்றினர். இந்த தீர்மானத்தில் இம்ரான் கானுக்கு ஆதரவளித்து வந்த எம்.க்யூ.எம் கட்சி, தங்களது ஆதரவை எதிர்கட்சிக்கு அளித்தது. இதனால் இம்ரான் கான் அரசின் பலம் 342 இடங்களில் 164 ஆக குறைந்தது.


அரசியல் சாசனத்திற்கு எதிரானது


தொடர்ந்து பாகிஸ்தான் மக்கள் கட்சியின் பலமும் 177  ஆக உயர்ந்தது. இதனையடுத்து இன்று நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. அப்போது பேசிய நாடாளுமன்ற துணை சபாநாயகர் காசிம் கான், “ இது அரசியல் சாசனத்திற்கு எதிராக இருப்பதாக கூறி இம்ரான் கான் அரசின் மீதான நம்பிக்கையில்லா தீர்மான நிராகரிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டு, நாடாளுமன்றத்தை வருகிற ஏப்ரல் 25 ஆம் தேதி வரை ஒத்திவைப்பதாக கூறினார். 


வெளிநாட்டு சதி


இதைத்தொடர்ந்து பேசிய பிரதமர் இம்ரான் கான், ``நம்பிக்கையில்லா தீர்மானத்தை கலைக்கும் முடிவு சரியானதே. எனது அரசை கலைக்க வெளிநாட்டு சதி நடந்தது நிரூபணமாகியுள்ளது. ஆகவே,  நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு விரைவில் தேர்தல் நடத்த வேண்டும். தேர்தல் நடைபெறும்வரை இடைக்கால அரசு அமைக்கப்பட வேண்டும். தங்களை யார் ஆளவேண்டும் என்பதை மக்களே முடிவு செய்யட்டும்" என்று பேசினார்.


நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நிராகரிக்கப்பட்ட நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நிராகரிக்கப்பட்டதால் உச்ச நீதிமன்றத்தில் முறையிட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளன. 2018ல் பிரதமரான இம்ரான் கானின் ஆட்சி காலம் அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை உள்ள நிலையில் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு உள்ளது.


இதனிடையே பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் உள்ளிருப்புப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.பொருளாதார நெருக்கடிக்கு காரணமான இம்ரான் கான் பதவி விலக வேண்டும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.




மேலும் படிக்க: Tiktok Love: சிறையிலிருக்கும் இளைஞருடன் டிக்டாக் மூலம் காதலில் விழுந்த பெண்.. !




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண