தொடக்க விழாக்கள் மற்றும் கடை திறப்பு விழாக்களில் அரசியல்வாதிகள், பிரபலங்கள் கத்தரிக்கோலால் ரிப்பனை வெட்டுவது வழக்கம். இந்தியாவில் மட்டுமில்லாமல் உலகெங்கிலும் இந்த காட்சியை பார்க்கலாம். ஆனால், பாகிஸ்தானில் அமைச்சர் ஒருவர் தனது பற்களால் ரிப்பனை வெட்டி கடையை திறைந்து வைத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.


பாகிஸ்தானின் சிறைத்துறை அமைச்சரும், பஞ்சாப் அரசின் செய்தித் தொடர்பாளருமான ஃபயாஸ் - உல்-ஹசன் சோஹன். கடந்த வியாழக்கிழமை, ராவல்பிண்டி தொகுதியில் புதிதாக கட்டப்பட்ட எலெக்ட்ரானிக்ஸ் கடையை திறந்து வைக்க அமைச்சர் அழைக்கப்பட்டார். அப்போது, அமைச்சர் ஆரம்பத்தில் கத்தரிக்கோலால் ரிப்பனை வெட்ட முயற்சிக்கிறார். கத்தரிக்கோலால் ரிப்பனை வெட்ட அமைச்சர் பல முறை தவறியதால், அங்குள்ளவர்கள் சிரிக்க ஆரம்பித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து, சமயோசிதமாக செயல்பட்ட அமைச்சர் தனது பற்களால் ரிப்பனை வெட்டி கடையை திறந்து வைத்தார். அமைச்சரின் செயலால் மேலும் அங்கு சிரிப்பலை தோன்றியது. வீடியோவாக பதிவான இந்த சம்பவங்களை நெட்டிசன்கள் சமூகவலைதளத்தில் பகிர்ந்து வைரலாக்கினர். மேலும், கடை திறப்பு விழாவில் மாஸ்க் அணியாமல் பங்கேற்ற பாகிஸ்தானை அமைச்சரை நெட்டிசன்கள் விமர்சிக்கவும் செய்தனர்.






இந்த வீடியோவை அமைச்சர் ஃபயாஸ் - உல்-ஹசன்சோஹன் தனது டுவிட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார். அத்துடன் கத்திரிக்கோல் மோசமாக இருந்ததால், தனது பற்களால் ரிப்பனை வெட்டியதாகவும் விளக்கம் கொடுத்தார்.


சமூக ஊடக பயனர்கள் வீடியோவைப் பகிர்ந்துள்ளனர், இது உடனடியாக இணையத்தில் சலசலப்பை உருவாக்கியது. அமைச்சர் தனது வெரிஃபை ட்விட்டர் கைப்பிடியிலிருந்து 21 வினாடிகள் நீண்ட கிளிப்பைப் பகிர்ந்து கொண்டார், ரிப்பனை வெட்டுவதற்கான அவரது தனித்துவமான முயற்சியின் காரணத்தை விளக்கினார். புதிய ஸ்டைலில் ரிப்பனை வெட்டிய அமைச்சர் குறித்து நெட்டிசன்கள் பதிவிட்ட கிண்டல் பதிவுகள் கீழே உள்ளன.