இம்ரான் கான்


அல்-காதிர் அறக்கட்டளை வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கானை கடந்த 10ஆம் தேதி இஸ்லாமாபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில்  இஸ்லாமாபாத் காவல்துறை கைது செய்தது. இஸ்லாமாபாத் காவல்துறை கைது செய்தது. இம்ரான் கைது செய்யப்பட்டதை கண்டித்து அந்நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் போராட்டத்தில் குதித்தனர். 


இத்தகைய சூழலில், இம்ரான் கான் கைது செய்யப்பட்டது சட்ட விரோதம் என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்தது. மேலும், அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் கூறியது. இச்சூழலில், இந்த வழக்கில் இம்ரான் கானுக்கு பிணை வழங்கி இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 


10 ஆண்டு சிறை


இந்நிலைலயில் இம்ரான் கான் சில பரபரப்பான குற்றச்சாட்டுகளை தெரிவித்துள்ளார். தேசத் துரோகச் சட்டத்தை பயன்படுத்தி அடுத்த பத்து ஆண்டுகளுக்கு என்னை சிறையில் அடைப்பது தான் ராணுவத்தின் திட்டம் என்று குற்றம் சாட்டியுள்ளார்.


இதுபற்றி இம்ரான் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, "இது தான் லண்டன் திட்டம். இந்த லண்டன் திட்டம் தற்போது தான் முழுமையாக வெளிவந்துள்ளது. நான் சிறைக்குள் இருந்தபோது வன்முறை ஏற்பட்டதாக கூறி, தன்னை கொடுமை செய்ய பல்வேறு திட்டடங்களை தீட்டினர். இதுமட்டுமின்றி, எனது மனைவி புஷ்ரா பேகத்தையும் அடைத்து கொடுமை செய்து, என்னை அவமானப்படுத்துவதே நோக்கமாக கொண்டுள்ளனர். மேலும், அடுத்த 10 ஆண்டுகளுக்கு என்னை சிறையில் அடைப்பது தான் தற்போதுள்ள நோக்கமாக வைத்துள்ளனர்" என்று தெரிவித்தார்.


"திட்டமிட்ட சதி”


”இதற்காக அவர்கள் இரண்டு விஷயங்களை செய்தனர். முதலில் வேண்டுமென்றே என் கட்சிகாரர்கள் தான் திட்டமிட்டு வன்முறையை கிளப்பியதாக வதந்தி பரப்பினர். இரண்டாவதாக, ஊடகங்கள் முழுவதுமாக அவர்களின் கட்டுப்பாட்டுகள் வைக்க முயற்சித்தனர். 


நாளை என்னை கைது செய்தால் மக்கள் வெளியே போராட்டங்களின் குதிக்கக் கூடாது என்ற எண்ணத்தில் இதனை செய்துள்ளனர். இது திட்டமிட்ட சதி. நாளை அவர்கள் மீண்டும் இணைய சேவைகளை நிறுத்தி சமூக ஊடகங்களை தடை செய்வார்கள்.  இது போதாததுக்கு, வீடுகளுக்குள் புகுந்து, பெண்கள் மீது கைவைக்கிறார்கள்” என்று தெரிவித்தார்.


"அநீதி நிலவும் நாடுகளில் நீண்ட நாள் வாழ முடியாது”


இதனால் பாகிஸ்தான் மக்களுக்கு நான் ஒன்று மட்டும் சொல்லுகிறேன். எனது கடைசி துளி இரத்தம் இருக்கும் வரை நாட்டிற்காக போராடுவேன். ஏனென்றால் இதுபோன்றவர்களுக்கு அடிமையாக இருப்பது பதிலாக நான் மரணத்தையே தேர்ந்தெடுப்பேன். 


கடவுளை தவிர வேற யாருக்கும்  தலைவணங்க மாட்டேன் என்று உறுதி மொழி எடுத்துக் இருக்கிறேன். இவர்கள் அனைவரும் இதுபோன்று செய்வற்தகு நாம் பயந்தால், நம் எதிர்கால சந்ததியினருக்கு அவமானம் தான் ஏற்படும். அநீதி நிலவும் நாடுகளில் நீண்ட நாள் வாழ முடியாது” என்று பரபரப்பான கருத்துகளை தெரிவித்தார்.