நாம் எங்கு இருந்தாலும் தாயை கைவிடக் கூடாது என்று ஆளுநர் ஆர்.என் ரவி தெரிவித்துள்ளார்.


சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில்அன்னையர் தின விழா நடைபெற்று வருகிறது. இதில் பங்கேற்றுள்ள ஆளுநர் ரவி, ”நாம் எங்கு இருந்தாலும் தாயை கைவிடக்கூடாது. வளர்ந்து வரும் உலகில் தற்போதைய இளைஞர்கள் பெற்றோர்களை விட்டு விட்டு வேறு பகுதிக்கு செல்கின்றனர். குழந்தைகள் குடும்பத்தினர் வளர்ச்சிக்கு உழைப்பதை அம்மாக்கள் மகிழ்ச்சியாகவே கருதுகின்றனர். தாய் மூலம் மட்டுமே மனிதனுக்கு அன்பு குணம் வருகின்றன” என்றார். 


மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக் கிழமையில் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது. அதன் படி இன்று அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. 


அமெரிக்காவில் கடந்த 1908-ஆம் ஆண்டு அண்ணா ஜார்விஸ் என்பவர் முதன் முதலில் அன்னையர் தின கொண்டாட்டத்தை முன்னெடுத்தார். தன்னுடைய சொந்த தாயாருக்காக அன்னையர் தினத்தை அவர் அனுசரித்தார். இவருடைய தாயார் ஆண் ரீவிஸ் ஜார்விஸ் சமூக சேவகியாக வாழ்ந்தவர். உள்நாட்டுப் போரில் காயம் அடைகின்ற ராணுவ வீரர்களுக்கு சேவை செய்வதை இவர் வாடிக்கையாக செய்து வந்தார்.


நாட்டுக்கும், வீட்டுக்கும் மகத்தான சேவைகளை செய்த தன் தாயாரை நினைவு கூரும் விதமாகத்தான் அன்னையர் தினத்தை அண்ணா ஜார்விஸ் கொண்டாடத் தொடங்கினார். அவரது முயற்சிகளுக்கு அமெரிக்க அரசு 1914-ஆம் ஆண்டு அங்கீகாரம் வழங்கியது. அப்போது முதல், அன்றைய நாளை அன்னையர் தினமாக உலகெங்கிலும் கொண்டாடி வருகின்றனர்.


அன்னையின் அன்பு, அர்பணிப்பு, தியாகம் ஆகியவற்றை கொண்டாட ஒரு நாள் போதாது தான். ஒரு குடும்பத்திற்கு பொருளாதர ரீதியாக ஒரு தந்தை முதுகெலும்பாக திகழ்ந்தாலும், அன்னை முக்கிய பங்காற்றுகிறா. அன்னை இல்லாமல் ஒரு குடும்பம் முழுமை பெறுவதில்லை. உணர்வு பூர்வமாக ஒரு குழந்தையை அணுக அன்னையால் மட்டுமே முடியும். 


இன்னும் சொல்லப்போனால், சுயநலம் என்ற ஒன்று  இல்லாத ஒரு உறவு இவ்வுலகில் உண்டெனில் அது அம்மாவாக தான் இருக்க முடியும். அப்படிப்பட்ட அன்னையை இன்று நாம் கொண்டாடி மகிழ்வோம்.


மேலும் படிக்க 


Mother's day special: ஹீரோயின் டூ அம்மா...! தமிழ் சினிமா கண்ட பல வகையான அம்மாக்கள்...