இந்தியா கொரோனா பாதிப்பு காரணமாக பரிதவித்துவரும் நிலையில் பாகிஸ்தான் அரசாங்கமும் உலக நாடுகளும் உதவ முன்வரவேண்டும் என பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஷோயப் அக்தர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Continues below advertisement

Continues below advertisement

இது தொடர்பாகத் தனது ட்விட்டர் வலைத்தளத்தில் அவர் வெளியிட்டுள்ளக் காணொளியில் "இந்தியா உண்மையிலேயே கொரோனா வைரஸுக்கு எதிராகப் போராடிக் கொண்டிருக்கிறது, அங்கே சுகாதார கட்டமைப்பு இதனால் நொறுங்கி வருகிறது. இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் நாம் அனைவரும் ஒன்றிணைந்திருக்க வேண்டும். ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருக்க வேண்டும். டெல்லி, மும்பை, என அனைத்து இடங்களிலும் மக்கள் உயிருக்குப் போராடி வருகிறார்கள் இப்படியான சூழலை எந்த அரசாங்கத்தாலுமே சமாளிக்க முடியாது. அதனால் பாகிஸ்தான் அரசையும் மற்றும் இதர உலக நாடுகளையும் நமது சகோதர சகோதரிகளுக்கு உதவக் கேட்டுக் கொள்கிறேன்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.