ஆஃப்கானிஸ்தானிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் மீது மர்ம நபர்களால் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
பாகிஸ்தான் தூதரகத்தில் தாக்குதல் :
ஆஃப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில், ஆயுதம் ஏந்திய குழுவினர் தீடீரென தாக்குதல் நடத்தியதாக கூறப்படுகிறது. இத்தாக்குதலில் பாகிஸ்தான் தூதர் உபைத் நிசாமானி படுகாயமடைந்ததாகவும், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் சில அதிகாரிகள் காயமடைந்ததாகவும், அவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஆஃப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான்களின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், கடந்த மாதங்களுக்கு முன்பு, ஆஃப்கானிஸ்தானில் உள்ள பாகிஸ்தான் தூதரக அலுவலகத்தில், அலுவலக வேலைகளை பார்ப்பதற்காக பாகிஸ்தான் தூதர் உபைத் நிசாமானி சென்றார்.
இந்நிலையில், நேற்று மாலை, அடையாளம் தெரியாத கும்பல் ஒன்று, பாகிஸ்தான் தூதரகத்தின் மீது தாக்குதல் நடத்தியுள்ளது.
பாகிஸ்தான் பிரதமர் கண்டனம்:
இச்சம்பவத்திற்கு பாகிஸ்தான் பிரதமர் செபாஷ் செரீஃப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது மிகப்பெரிய படுகொலை தாக்குதல் என்றும் தெரிவித்துள்ளார்.
இத்தாக்குதலுக்கு, தாலிபான்கள் வெளியுறவுத்துறை அமைச்சகமும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
இரண்டு நாடுகளுக்கும் இடையிலான எல்லையில் பதட்டங்களைக் குறைக்க தலிபான் அதிகாரிகளைச் சந்திக்க, பாகிஸ்தானின் வெளியுறவு அமைச்சர் ஒரு குழுவை காபூலுக்கு அழைத்துச் சென்றார். இந்நிலையில், சில நாட்களுக்குப் பிறகு, இந்த தாக்குதல் நடந்துள்ளது. மேலும், இந்த இரண்டு தாக்குதல்களின் பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பது தெளிவாகத் தெரியவில்லை.
தொடர் தாக்குதல்:
இதற்கிடையில், முன்னாள் ஆப்கானிஸ்தான் பிரதமர் குல்புதீன் ஹெக்மத்யாருக்கு தொடர்புடைய ஹெஸ்ப்-இ-இஸ்லாமி கட்சியின் அலுவலகம் அருகே டிசம்பர்-2 ( வெள்ளிக்கிழமை ),காபூலில் நடந்த மற்றொரு தாக்குதலில் இரண்டு பேர் காயமடைந்ததாகவும் கூறப்படுகிறது.
மேலும், காபூலில் செப்டம்பர் மாதம், ஒரு தற்கொலை குண்டுதாரி ரஷ்ய தூதரகத்தின் நுழைவாயிலுக்கு அருகே வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தபோது, இரண்டு ரஷ்ய தூதரக ஊழியர்கள் உட்பட ஆறு பேர் கொல்லப்பட்டனர்,
இதுபோன்ற தாக்குதலானது, ஆஃப்கானிஸ்தான் நாட்டில் தொடர்ந்து நடைபெற்று கொண்டிருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
Also Read: நாடாளுமன்றத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட எம்பிக்கள்...பெண் எம்பி மீது தாக்குதல்.. என்ன ஆச்சு?
Also Read: நாடாளுமன்றத்தில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்ட எம்பிக்கள்...பெண் எம்பி மீது தாக்குதல்.. என்ன ஆச்சு?