Pakistan Bomb Attack : பாகிஸ்தானில் உள்ள காவல் நிலையத்தில் நேற்று திடீரென குண்டு வெடித்ததில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
குண்டுவெடிப்பு:
பாகிஸ்தானின் அண்டை நாடான வடமேற்கு பகுதியில் உள்ள கபால் பகுதி காவல்நிலையத்தில் (பயங்கரவாத எதிர்ப்பு) நேற்று இரண்டு குண்டு வெடிப்பு சம்பங்கள் நடைபெற்றன. இதில் காவல்நிலைய கட்டடங்களின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது.
13 பேர் உயிரிழப்பு:
காவல்துறையினரும், மீட்பு படையினரும் சம்பவ இடத்திற்கு வந்து மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த குண்டு வெடிப்பில் சுமார் 13 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த குண்டிவெடிப்புக்கு காரணம் வெடிபொருள் கிடங்கில் ஏற்பட்ட விபத்து என முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், காவல்நிலையத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் சுமார் 50க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது. அவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதில் சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிகிறது. இதனால் உயிரிழப்புகள் அதிகரிக்கக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காரணம் என்ன?
இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் குண்டு வெடிப்புக்கான காரணம் பற்றி இன்னும் தெரியவில்லை. இந்த சம்பவம் பற்றி போலீசார் கூறுகையில், "கபால் காவல்நிலையத்தில் வெடி மருந்து இருப்பு உள்ளது. அங்கு சேமிக்கப்பட்டிருக்கும் பழைய வெடி பொருட்களே இந்த குண்டு வெடிப்பிற்கு காரணம் என்று தெரிகிறது. மேலும் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானவர்கள் காவல்துறை பயங்கரவாத தடுப்புத்துறை பணியில் உள்ள அதிகாரிகள் என்று தெரிகிறது. அதேசமயம் சில தரப்பினர் இந்த சம்பவம் தற்கொலைப்படை தாக்குதல் என்று தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அந்த நாட்டு காவல்துறை விசாரித்து வருகிறது.
இந்த விபத்தில் பலர் படுகாயமடைந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறது. இதில் சிலரின் உடல்நிலை கவலைக்கிடமாக இருக்கின்றனர். மேலும், வெடிவிபத்துக்கான காரணத்தை அறிய போலீசார் மற்றும் விசாரணை அமைப்புகளும் விசாரணை நடத்தி வருகின்றனர்" என்று தெரிவித்தனர். பாகிஸ்தானில் உள்ள காவல்நிலையத்தில் ஏற்பட்ட குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க
Indonesia Earthquake: இந்தோனேஷியாவில் அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கை