Omicron Doubling time: ஒன்றரை நாளில் இரட்டிப்பு வேகம் எடுக்கும் ஒமிக்ரான்..! அதிர்ச்சி ரிப்போர்ட் அளித்த WHO

தடுப்பூசிகள் மூலம் குறிப்பிட்ட நோய் எதிர்ப்பு திறனைப் பெற்றுள்ள நாடுகளில் கூட இந்த பரவல் விகிதம் அதிகரித்து வருகின்றது - உலக சுகாதார அமைப்பு

Continues below advertisement

கொரோனா சமூக தொற்றுப் பரவல்  அதிகரித்து காணும் இடங்களில்,  பாதிப்புகள் இரட்டிப்பாகும் காலம் (Doubling time) கிட்டத்தட்ட 1.5-3 நாட்களாக குறைந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. அதாவது, வெறும் 1.5 நாட்களுக்குள் பாதிப்பு எண்ணிக்கை இரண்டு மடங்காக அதிகரித்து வருகின்றது. 

Continues below advertisement

ஒமிக்ரான் தொற்று பரவல் குறித்து உலக சுகாதார அமைப்பு  அவ்வப்போது உலக நாடுகளுக்கு எச்சரிக்கை விடுத்து வருகிறது.  இந்நிலையில், கடந்த வெள்ளிகிழமை, ஒமிக்ரான் தொற்று பரவலின்  தற்போதைய  நிலவரத்தை வெளியிட்டது ( மேலும், விவரங்களுக்கு: Enhancing Readiness for Omicron (B.1.1.529): Technical Brief and Priority Actions for Member States) 

தனது அறிக்கையில், "கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில், பாதிப்புகள் இரட்டிப்பாகும் காலம் (Doubling time) கிட்டத்தட்ட 1 முதல் 3  நாட்களாக குறைந்துள்ளது. நிச்சயாமாக,  ஒமிக்ரான் வகை தொற்று, டெல்டா வகையை விட அதிகமாகப் பரவக் கூடியது.  

மேலும், தடுப்பூசிகள் மூலம் குறிப்பிட்ட நோய் எதிர்ப்பு திறனைப் பெற்றுள்ள நாடுகளில் கூட இந்த பரவல் விகிதம் அதிகரித்து வருகின்றது. இதற்கு ஒமிக்ரானின்  தடுப்பூசிகளிலிருந்து தப்பிக்கும் அம்சங்கள் காரணமா? (அ) ஒமிக்ரான் பரவல் மற்றும் நோயின்  தீவிரத் தன்மை காரணமா? என்று உறுதியாக சொல்ல முடியவில்லை. இரண்டு காரங்களும் ஒரு சேர இருக்கலாம் என்ற கோணத்திலும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. 


      

இருந்தாலும், தடுப்பூசி போட்டுக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு ஆற்றலைத் (ஆண்டிபாடி) தாண்டி அதிக ஆற்றல் பெற்ற வலிமையான செல்லுலார் நோய் எதிர்ப்பு சக்தியும் (டி-செல்ஸ் அல்லது நினைவாற்றல் உயிரணுக்களே) பெறுகிறோம். எனவே, எந்தவொரு தீவிர பாதிப்புக்கு எதிரான பாதுக்கப்பையும் தடுப்பூசி அளிக்கிறது. 

தற்போது 89 நாடுகளில் இந்த தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  முன்னதாக, அதன் தலைவர் தலைவர் டெட்ரோஸ் அதானம் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  இது மேலும் பல நாடுகளுக்கு பரவ வாய்ப்பு உள்ளது என்று எச்சரித்தார். ஆப்பிரிக்க நாடுகளில் இந்த தொற்று பாதிப்பு அதிகமாக உள்ளதாகக் கூறிய அவர், இது குறித்து எச்சரிக்கையுடன் இருக்குமாறு அறிவுறுத்தினார்.

இதனிடையே ஐரோப்பிய நாடுகளில் கோவிட் தொற்று அதிகரித்துள்ளதை அடுத்து, அங்கு மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. நெதர்லாந்தில் தொடக்கப் பள்ளிகள் மூடப்படுவதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.  

Continues below advertisement