ஒருவரிடம் நல்ல மதிப்பை பெற நல்ல உடையலங்காரம் தேவையான ஒன்று. இந்த உலகத்தில் என்னதான் ஒருவர் நல்லவராக இருந்தாலும் அவர் முதலில் மதிக்கப்படுவது உடையால் தான். ஆள் பாதி ஆடை பாதி என்ற அடிப்படையில்தான் இன்னும் இந்த உலகம் இயங்கி கொண்டு இருக்கிறது.
அதன் அடிப்படையில் கசங்கிய ஆடையை எவரும் விரும்பமாட்டார்கள். அத்தகைய கசங்கிய ஆடைகளிலிருந்து மடிப்புகளை அகற்ற அயர்னிங் உதவுகிறது. நேரம் இருப்பவர்கள் வீட்டில் இருந்தே தங்கள் துணிகளை தாங்களே அயர்ன் செய்து கொள்வார்கள்.
நேரம் இல்லாத ஒரு சிலர் அயர்ன் செய்ய துணிகளை கடைகளில் கொடுத்து தேய்த்து கொள்வார்கள். அப்படி கசங்கிய துணிகளை தேய்க்க தண்ணீரை தெளிப்பார்கள். இப்படி இருக்க ஒரு நபர் அதை ஒரு படி மேலே கொண்டு சென்று ஆடைகளை அயர்ன் செய்யும் போது வாயில் இருந்த தண்ணீரை துப்பி அயர்ன் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
துணி கடை வைத்திருக்கும் வயதான நபர் ஒருவர் தான் தேய்க்க இருக்கும் துணியில் வாயில் இருந்த தண்ணீரை துப்பி அயர்ன் செய்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது. அந்த வீடியோக்கு கீழ் "இயற்கை நீர் தெளிப்பான்” என்று ஒரு சிலர் நக்கலாக கமெண்ட் செய்து வருகின்றனர்.
துணிகளை இஸ்திரி செய்யும் போது முதியவர் ஒரு டம்ளரில் தண்ணீர் பருகுவது வீடியோவில் உள்ளது. பின்னர் அவர் ஒரு வெள்ளை சட்டை மீது தண்ணீரை துப்பினார். அந்தச் செயலை அந்த நபர் பலமுறை செய்து சட்டையின் கைகளில் தண்ணீரைத் தெளித்து, அதை மடித்து முழுத் துணியையும் மூடுகிறார்.
இந்த வீடியோ கிளிப்பை 16 லட்சத்திற்கும் அதிகமான நபர்கள் பாகிட்டத்தட்ட 1.20 லட்சம் பயனர்கள் அதை லைக்ஸும் செய்துள்ளனர். ஒரு சிலர் இந்த வீடியோக்கு கீழ் "ஓய்வு பெற்ற பிறகு டிரிபிள் எச்" என்றும், இவர் கொரோனாவை பரப்புகிறார் என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர்.
இப்போதுவரை இந்த வீடியோ எங்கே எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ஆனால் இந்த கிளிப் பாகிஸ்தானில் எடுக்கப்பட்டதாக இருக்கலாம் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்