வெளிநாடுகள் பல விசித்திரமான வழக்குகளை சந்திக்கின்றன. பல விந்தையான தீர்ப்புகளையும் எதிர்கொள்கின்றன. 


அப்படியொரு விசித்திரமான வழக்குதான் அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்த நபர் தொடர்ந்த வழக்கு. அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜான் வால்வோர்த். இவர் கடந்த 2018 ஆம் ஆண்டு அப்போதைய காதலில் ஜூடி கோரி வீட்டின் பேஸ்மென்ட் படிக்கட்டுகளில் இடரி விழுந்து காயமுற்றார். 


இந்தச் சம்பவம் கடந்த 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற்றது. ஜான் வால்வோர்த், தனது அன்றைய காதலியும், இன்றைய மனைவியுமான ஜூடி கோரி வீட்டின் பேஸ்மென்ட் படிக்கட்டில் நடக்கும் போது ஜூடியின் ஷூ தட்டிவிட்டு கீழே விழுந்தார். வால்வார்த், ஜூடியின் காரில் இருந்த 4 வினிகர் கோப்பைகளையும் சுமந்து கொண்டு படியில் நடந்தபோது இந்த விபத்து நேர்ந்தது. இதனால், வால்வார்த்தின் கை, கால் எலும்புகள் முறிந்தன. அவருக்கு சிறு அறுவை சிகிச்சைகளும் தேவைப்பட்டன. இந்த மருத்துவ செலவுகள் நிமித்தமாக வால்வார்த் 80,000 டாலர் செலவு செய்தார்.


மேலும், சிகிச்சை முடியும் வரை பணிக்கு செல்ல முடியாததால் 18,000 டாலர் இழந்தார். இது தொடர்பாக அக்டோபர் 2019ல் ஜான் வால்வோர்த் வழக்கு தொடர்ந்தார். இந்த இடைப்பட்ட காலகட்டத்தில் ஜான் வால்வர்த்துக்கும், ஜூடி கோரிக்கும் திருமணமாகியிருந்தது. இருந்தாலும் தனக்கு ஏற்பட்ட விபத்துக்கு ஜூடியின் காலணிகள் தான் காரணம் என்று அவர் தீர்க்கமாக நம்பினார். இதனால் அவர் வழக்கு தொடர்ந்திருந்தார்.


இந்த வழக்கு 8வது அமர்வு நீதிமன்றத்தில் மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் ஜான் வால்வோர்த் இந்த வழக்கில் அவரின் மனைவுக்கு எதிராக வழக்கு தொடர முகாந்திரம் இல்லை எனக் கூறிவிட்டனர். 


வழக்கு விசாரணையின் போது ஜூடி கோரி, அந்த விபத்துக்கு நான் எப்படி காரணமாக அமைய முடியும். நான் எப்போதுமே எனது வீட்டின் அந்தக் குறிப்பிட்ட பகுதியில் தான் எனது ஷூக்களை வைப்பது வழக்கம் என்றார். அதனால் அது குறித்து வால்வார்த்துக்கு தனிப்பட்ட முறையில் எச்சரிக்க வேண்டிய அவசியம் இருப்பதாக நான் கருதவில்லை என்றார். மேலும், ஜான் வால்வோர்த் அங்கிருந்த விழுந்ததைத் தான் பார்க்கவில்லை என்றும் அதனால் தனது ஷூக்கள் இடரியே அவர் விழுந்தார் என்பதை தன்னால் உறுதியாகக் கூற முடியும் என்றும் தெரிவித்திருந்தார்.




அதேவேளையில், ஜான் வால்வோர்த் தனது மனுவில், ஜூடி கோரி பேஸ்மென்ட் படியில் ஷூக்களை வைத்திருந்ததால் தான் நான் கீழே விழுந்தேன். ஜூடி தனது வீட்டி சூழலை பிறருக்கு, விருந்தினருக்கு அபாயகரமானதாக வைத்திருக்கிறார் என்று குறிப்பிட்டிருந்தார். அதனால், தனக்கு இழப்பீடு வேண்டும் என்றும் அவர் கூறியிருந்தார்.


இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள், படிக்கட்டில் ஷூ, ஷூ ரேக் வைப்பது என்பதை சாதாரணமாகவே எந்த ஒரு நிலையான புத்தி உடைய மனிதரும் இயல்பாக கவனிக்கக் கூடிய விஷயம் தான்.


ஆகையால் சம்பவத்தன்று ஜான் வால்வோர்த் அதை கவனித்திருக்க அதிக சாத்தியக்கூறுகள் இருக்கின்றன. ஆகையால் இந்த வழக்கில் அவர் மனைவி ஜூடி கோரி மீது வழக்கு தொடர்ந்ததில் எந்த முகாந்தரமும் இல்லை எனக் கோரி வழக்கை தள்ளுபடி செய்தனர்.