வட கொரியா நேற்று மேலும் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை அதன் கிழக்கு கடற்கரையில் ஏவியது, தலைவர் கிம் ஜாங் உன்னின் சகோதரி, வட கொரியா பசிபிக் பகுதியை "ஏவுகானைகளை ஏவும் வரம்பாக" பயன்படுத்துவது அமெரிக்கப் படைகளின் நடத்தையைப் பொறுத்தது என்று கூறினார்.


வட கொரியா ஜப்பானின் மேற்கு கடற்கரைக்கு அருகில் கடலில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை (ICBM) ஏவிய இரண்டு நாட்களுக்குப் பின் நேற்று மீண்டும் இரண்டு பாலிஸ்டிக் ஏவுகனைகளை ஏவியது. 395 கிமீ (245 மைல்கள்) மற்றும் 337 கிமீ (209 மைல்) தொலைவில் உள்ள இலக்குகளை இலக்காகக் கொண்டு ராக்கெட் லாஞ்சரில் இருந்து இரண்டு ஏவுகணைகளை ஏவியது என்று வட கொரியாவின் அரசு ஊடகம் உறுதிப்படுத்தியது. 600 மிமீ மல்டிபிள் ராக்கெட் லாஞ்சர் மூலம் இது ஏவப்பட்டது. இது தந்திரோபாய அணு ஆயுதத்தின் ஒரு வழிமுறையாகும், எதிரி விமானநிலையத்தை முடக்கும் திறன் கொண்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.


தென்கொரியா - அமெரிக்க படைகள் இணைந்து வாஷிங்டனில் அடுத்த வாரம் (ஞாயிற்றுக்கிழமை) கூட்டு பயிற்சியில் ஈடுபடவுள்ளன. இதற்கு வடகொரியா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், திடீரென கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை சோதனையை செய்துள்ளது.


தலைவர் கிம்மின் சகோதரி கிம் யோ ஜாங்கின் இந்த செயல், மேலும் ஏவுகணைகளை அமெரிக்கப் பகுதியான குவாமின் திசையில் ஏவப்படலாம் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். நேற்று இரவு 10 மணி (GMT) ஏவப்பட்ட இரண்டு ஏவுகணைகளும் அதிகபட்சமாக 100 கிமீ மற்றும் 50 கிமீ உயரத்தை எட்டியதாக ஜப்பான் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதைப்பற்றி ஆலோசனை செய்ய ஐ.நா பாதுகாப்பு அமைச்சகத்தை அழைத்து அவசர ஆய்வு கூட்டம் நடந்தது.  


தென் கொரியாவின் இராணுவம் இந்த ஏவுதல்களை கண்டித்து, உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தியது. ஜனாதிபதி யூன் சுக்-யோலின் அலுவலகம், சோதனைகளை மறுபரிசீலனை செய்வதற்கும் எதிர் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும் தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தை நடத்தியதாகக் கூறியது. வட கொரியாவின் சமீபத்திய ICBM மற்றும் ஏவுகணை சோதனைகள் தொடர்பாக வட கொரியாவின் ஆயுத திட்டங்களுடன் தொடர்புடைய நான்கு நபர்கள் மற்றும் ஐந்து நிறுவனங்கள் மீது தடைகளை தென் கொரியாவின் வெளியுறவு அமைச்சகம் அறிவித்தது.


தென் கொரிய அமைச்சகம் அமெரிக்க மற்றும் ஜப்பானிய சகாக்களுடன் தொலைபேசி மூலம் இந்த ஏவுதலை பற்றி அலோசனை மேற்கொண்டனர். வட கொரியாவின் இந்த செயலை நியாயப்படுத்த முடியாது என்றும் அதன் விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கூறப்பட்டது.