வட கொரியா அண்மையில் தடுப்பு அணு ஆயுதத் தாக்குதலை நடத்த அனுமதிக்கும் சட்டத்தை இயற்றியுள்ளது. மேலும் அணு ஆயுதம் கொண்ட நாடாக அதன் நிலையை மீள் ஆய்வு செய்ய முடியாது என்றும் அறிவித்து அண்மையில் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. 


வட கொரியாவுக்கும் தென் கொரியாவுக்கும் இடையிலான உறவுகள் சிதைந்து வரும் நேரத்தில் இந்த அறிவிப்பு வந்துள்ளது, தலைநகர் பியோங்யாங் தனது பிரதேசத்தில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டதற்கு  தென் கொரியாவைக் குற்றம் சாட்டியது. இந்த ஆண்டு  எண்ணிக்கையிலான ஆயுத சோதனைகளை நடத்தியது.


ஒரு அந்நிய நாடு பியோங்யாங்கிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும்போது, ​​​​வடகொரியா "தானாகவே" மற்றும் "உடனடியாக விரோத சக்திகளை அழிக்க" தடுப்பு அணுசக்தி தாக்குதலை நடத்த இந்த புதிய சட்டம் அனுமதிக்கும் என்று அதிகாரப்பூர்வ கொரிய மத்திய செய்தி நிறுவனம் கே.சி.என்.ஏ. தெரிவித்துள்ளது.


புதிதாக இயற்றப்பட்ட சட்டத்தின் மூலம், "அணு ஆயுத நாடாக நமது நாட்டின் நிலை மாற்றி அமைக்க  முடியாததாகிவிட்டது" என்று வடகொரியத் தலைவர் கிம் ஜாங் உன் கூறியதாக அந்த செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


அமெரிக்கா மற்றும் தென் கொரியா உடனான எந்தப் போரிலும் தனது நாடு அணுசக்தித் திறனைத் திரட்டத் தயாராக இருப்பதாக ஜூலை மாதம் கிம் கூறினார்.


அமெரிக்காவுடனான பகைமையை எதிர்கொள்வதற்கு தேவையான அணு ஆயுதங்களை பியோங்யாங் ஒருபோதும் கைவிடாது என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.


வியாழன் அன்று சர்வாதிகார நாடான வட கொரியாவின் பெயர் அளவில் இயங்கும் பாராளுமன்றத்தில் ஒரு உரையின் போது பேசிய அவர், ​​"அணு ஆயுதங்களை முதலில் கைவிடுவது போன்ற எந்த எண்ணமும் இல்லை, மேலும் அதே சமயம் அணு ஆயுதமயமாக்கலும் இல்லை, அதற்கான பேச்சுவார்த்தையும் இல்லை" என்று அவர் கூறினார்.


 வட கொரிய ஆயுத சோதனைகளின் ஒரு கட்டமாக 2017 க்குப் பிறகு முதல் முறையாக முழு வீச்சில் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை கடந்த ஜனவரியில் ஏவியது.


வாஷிங்டன் மற்றும் தென் கொரிய அதிகாரிகள் பலமுறை எச்சரித்தும், வட கொரியா அதன் ஏழாவது அணு ஆயுத சோதனையை நடத்த தயாராகி வருகிறது.


வாஷிங்டனுக்கும் பியோங்யாங்கிற்கும் இடையில் 2019 தொடங்கி நடைபெற்று வரும் அணுசக்தி பேச்சுவார்த்தைகள் மற்றும் அரசியல் ரீதியான பேச்சுவார்த்தைகள் வடகொரியா மீதான பொருளாதாரத் தடைகள் நிவாரணம் அளிக்கும் வகையிலும் அமைந்தது. ஆனால் தற்போது வடகொரியா மீண்டும் அணு ஆயுத சோதனைக்குத் தயாராகி வரும் நிலையில் பேச்சுவார்த்தை தற்போது தடம் புரண்டுள்ளது.




தென்கொரியா கடந்த மாதம் பியோங்யாங்கிற்கு ஒரு துணிச்சலான உதவித் திட்டத்தை வழங்கியது, அதில் வடகொரியா அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிடுவதற்கு ஈடாக உணவு, ஆற்றல் மற்றும் உள்கட்டமைப்பு உதவி ஆகியவற்றை பரிந்துரைத்திருந்தது.


ஆனால் பியோங்யாங் இந்த வாய்ப்பை கேலி செய்தது, இது "அபத்தத்தின் உச்சம்" என்றும் பியாங்யாங் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாத ஒப்பந்தம் என்றும் அந்த நாடு கூறியது.


தென் கொரியாவின் தற்போதைய ஜனாதிபதி யூன் சுக்-யோல் கடந்த மாதம் தனது நிர்வாகத்திற்கு அதன் சொந்த அணுசக்தி தடுப்பு முறையைத் தொடர எந்த திட்டமும் இல்லை என்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.