இரண்டாம் எலிசபெத் மறைவையொட்டி, இளவரசர் சார்லஸ் தனது 70 ஆண்டு கால ஆட்சியின் முடிவுக்குப் பிறகு உடனடியாக மன்னராகிவிட்டார், இதையடுத்து அவரது மனைவிக்கு கமில்லாவுக்கு கோஹினூர் வழங்கப்படவுள்ளது.


கமில்லாவுக்கு கிரீடம்:


பிரிட்டனின் மிக நீண்ட கால ராணி இரண்டாம் எலிசபெத் தனது 96-வது வயதில் வியாழக்கிழமை காலமானார். அவரது உடல் நலத்தில் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக மருத்துவ கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டிருந்தார். இதையடுத்து, எலிசபெத் காலமானார் என்பதை நேற்று  மாலையில், பக்கிங்ஹாம் அரண்மனை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது.


இந்த ஆண்டின் தொடக்கத்தில் ராணி கூறியது போல் ராணியாக சார்லஸின் மனைவி கமில்லா கார்ன்வால் பட்டம் சூட்டுகிறார். அந்த நேரத்தில் கமிலாவுக்கு ராணியின் புகழ்பெற்ற கோஹினூர் கிரீடம் வழங்கப்படும்.




சர்ச்சையில் கோஹினூர்:


105.6 காரட் கோஹினூர் வைரம், பெரும்பாலும் கோஹ்-இ-நூர் என்று அழைக்கப்படுகிறது, இது பாரம்பரியத்தின் புதையல் ஆகும். இந்த வைரம் பதினான்காம் நூற்றாண்டில் இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது, மேலும் அடுத்தடுத்த ஆண்டுகளில், இது ஏராளமான மக்களுக்கு சொந்தமானது. இந்த வைரம் 1849 ஆம் ஆண்டில் விக்டோரியா மகாராணிக்கு வழங்கப்பட்டது, பஞ்சாபில் பிரிட்டிஷ் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து. அப்போதிருந்து, இது பிரிட்டிஷ் கிரவுன் ஜூவல்ஸின் ஒரு பகுதியாக இருந்து வருகிறது, இருப்பினும் இந்தியா உட்பட குறைந்தது நான்கு நாடுகள் சம்பந்தப்பட்ட நீண்டகால உரிமை சர்ச்சை இன்னும் உள்ளது.


இந்தியாவில் துக்கம் அனுசரிப்பு:


இந்நிலையில், பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்தின் மகாராணியான இரண்டாம் எலிசபெத்தின் மறைவையொட்டி அவருக்கு மரியாதை செலுத்தும் வகையில் நாளை மறுநாள் துக்கம் அனுசரிக்கப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் அறிக்கை வெளியிட்டுள்ளது.


இதுகுறித்து வெளியான அறிக்கையில், "இந்தியா முழுவதும் செப்டம்பர் 11ஆம் தேதி அன்று துக்கம் அனுசரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்தியா முழுவதும், வழக்கமாக தேசிய கொடி ஏற்றப்படும் அனைத்து கட்டிடங்களிலும் துக்க நாளன்று தேசிய கொடி அரைக்கம்பத்தில் பறக்கவிடப்படும். அனைத்து அரசு நிகழ்ச்சிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.