கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வட கொரியா தொலை தூரம் சென்று இலக்குகளைத் தகர்க்கும் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. இது குறித்து அமெரிக்காவின் ராணுவத் தலைமையகமான பென்டகன் கவலையும் வருத்தமும் தெரிவித்துள்ளது.


வட கொரியா, கொரிய தீபகற்பத்தின் குட்டி நாடு. கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு (அல்லது வட கொரியா) கிழக்கு ஆசியாவில் உள்ள கொரியத் தீபகற்பத்தின் வட பகுதியில் அமைந்த ஒரு நாடாகும். இதன் மிகப்பெரிய நகரம் மற்றும் தலைநகரம் பியொங்யாங் ஆகும். இதன் வடக்கில் சீனாவும் ரஷ்யாவும் அமைந்துள்ளன. தெற்கே தென் கொரியா அமைந்துள்ளது. சீனா, அமெரிக்கா , மற்றும் இந்தியா விற்கு அடுத்து உலகில் 4-ஆவது பெரிய இராணுவத்தைக் கொண்டுள்ளது. வட கொரியா ஒரு அணு ஆயுத நாடாக அறியப்படுகிறது. அதன் அணு ஆயுதக் கட்டமைப்புகள் குறித்து எப்போதுமே அமெரிக்கா கவலை தெரிவித்துவருவது குறிப்பிடத்தக்கது.


இந்நிலையில், கடந்த சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வட கொரியா தொலை தூரம் சென்று இலக்குகளைத் தகர்க்கும் ஏவுகணைகளை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. வார இறுதியில் வட கொரியா மேற்கொண்ட அணு ஆயுத சோதனை அண்டை நாடுகளுக்கு மட்டுமல்ல அதையும் தாண்டியுள்ள தேசங்களுக்கு நிச்சயமாக அச்சுறுத்தலே என்று அமெரிக்கா கூறியுள்ளது. அமெரிக்க இந்தோ பசிபிக் கமாண்ட் வெளியிட்டுள்ள அறிக்கை, இந்த ஏவுகணை சோதனை கொரிய ஜனநாயக மக்கள் குடியரசு நாடானது தொடர்ந்து ராணுவ திட்டங்களை விஸ்தரித்துக் கொண்டே செல்கிறது என்பதற்கு ஒரு அறிகுறி எனத் தெரிவித்துள்ளது. 




வட கொரியா சோதித்த ஏவுகணை 1500 கிலோ மீட்டர் தூரம் பாய்ந்து சென்று ஏவுகணைகளை இடைமறித்து தாக்கக் கூடியது, இந்தத் தூரத்தில் உள்ள இலக்குகளையும் துல்லியமாகத் தாக்கக் கூடியது. வட கொரிய நாடுகள் அணு ஆயுதங்களை வைத்திருப்பதால் அந்நாட்டின் மீது உலக நாடுகள் பல பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. ஆனால், அடிக்கடி தனது ராணுவத்த்தில் புதிய புதிய ஏவுகணைகளையும், அணு ஆயுதங்களையும் உருவாக்குவதற்கு அமெரிக்காவிடமிருந்து தங்கள் நாட்டைக் காப்பாற்ற வேண்டும் என்பதே காரணம் என வட கொரியா தெரிவித்து வருகிறது.


அமெரிக்கா தென் கொரியாவுடன் நட்பு பாராட்டி வருகிரது. தென் கொரியாவில் 28,500 அமெரிக்க வீரர்கள் உள்ளனர். இதையே வட கொரியா தனது ராணுவத்தை பலப்படுத்துவதற்கான காரணமாகக் கூறுகிறது. 2017-ஆம் ஆண்டுக்குப் பின்னர் வட கொரியா அணு ஆயுத சோதனைகளை நடத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அணு ஆயுதத் தயாரிப்பைக் கைவிட வேண்டும் என்று வட கொரியாவுக்கு சர்வதேச அணு சக்தி முகமையும் கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.