தென் கொரிய படங்களை பார்த்ததற்காக வட கொரியாவில்  இரண்டு சிறார்கள் பொது மக்கள் முன்பு தூக்கிலிடப்பட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. தூக்கிலிடப்பட்ட சிறார்களுக்கு வயது 16 முதல் 17 வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.


ஹைசன் விமானநிலையத்தில் வைத்து உள்ளூர்வாசிகள் முன்பு இரண்டு சிறார்கள் தூக்கிலிடப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கடந்த அக்டோபர் மாதம் நடந்திருந்தாலும் இதுகுறித்த தகவல் கடந்த வாரமே கசிந்துள்ளது. தென் கொரிய, வட கொரிய நாடுகளுக்கிடையே பதற்றம் நிலவி வரும் நிலையில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.


இது தொடர்பாக The Mirror வெளியிட்டுள்ள செய்தியில், "பதின்வயது மாணவர்களை பொதுமக்கள் முன்னிலையில் வைத்து, அவர்களுக்கு மரண தண்டனை விதித்து, உடனடியாக சுட்டுக் கொல்லப்பட்டனர்.


தென் கொரிய திரைப்படங்கள் மற்றும் நாடகங்களை பார்ப்பவர்களுக்கும் விநியோகம் செய்பவர்களுக்கும் மன்னிப்பு வழங்கப்பட மாட்டாது. அவர்களுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை வழங்கப்படும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.


கடும் தண்டனைகளுக்கும் விநோதமான உத்தரவுகளுக்கும் பெயர் போனது வட கொரியா. அந்த வகையில், "bomb", "gun" மற்றும் "satellite" போன்ற தேசபக்தி பெயர்களை குழந்தைகளுக்கு சூட்ட  வட கொரிய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது. மேலும், மென்மையான பெயர்களை வைக்க அரசு கட்டுப்பாடு வதித்தது.


தென் கொரியாவைப் போலவே, ஏ ரை (அன்பானவர்), சு மி (சூப்பர் அழகு) போன்ற அன்பான பெயர்களைப் குழந்தைகளுக்கு சூட்ட வட கொரியாவை ஆளும் கம்யூனிஸ்ட் அரசாங்கம் அனுமதித்து வந்தது. ஆனால், தற்போது, இந்த வகை பெயர்களை கொண்ட மக்கள், தங்களின் பெயரை தேசி பக்தி மற்றும் கொள்கை சார்ந்த பெயர்களாக மாற்றி கொள்ள வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது.


பெயரின் முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் ஒரே மாறியாக இருக்கும் வகையிலான பெயர்களை குழந்தைகளுக்கு சூட்ட வேண்டும் என சர்ச்சைகளுக்கு பெயர் போன வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் உத்தரவிட்டார். இதை பின்பற்றாதவர்கள் மீது அபராதம் விதிக்கப்படும் என்றும் அவர் எச்சரித்தார்.


 






பெயரின் முதல் எழுத்தும் இறுதி எழுத்தும் ஒரே மாறியாக இல்லாத பெயர்கள் சமதர்மத்திற்கு எதிரான பெயர்கள் என கிம் ஜாங் உன் நம்புவதாக கூறப்படுகிறது. அதிபரின் புதிய உத்தரவு குறித்து பேசிய வட கொரியவாசி, "அரசு தரப்பில் பெயர் மாற்றம் செய்ய அதிகாரிகள் வற்புறுத்துவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர். 


இறுதியில் மெய் எழுத்துக்கள் இல்லாத அனைத்துப் பெயர்களையும் திருத்தும்படியான அறிவிப்புகள் குடியிருப்பாளர்களின் கூட்டங்களில் கடந்த வாரம் முதல் தொடர்ந்து வழங்கப்பட்டன.


பெயரின் இறுதியில் மெய்யெழுத்து இல்லாத பெயர்களைக் கொண்டவர்கள், புரட்சிகர கொள்கைக்கு ஏற்ப தங்கள் பெயருக்கு அரசியல் அர்த்தங்களைச் சேர்க்க இந்த ஆண்டு இறுதி வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.