2022 ஆம் ஆண்டின் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசானது, அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று பேருக்கு  அறிவிக்கப்பட்டுள்ளது.


அமெரிக்காவைச் சேர்ந்த பென் எஸ். பெர்னாக், டக்லஸ் டைமண்ட், பிலிப் டிவிக் ஆகிய மூன்று பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.


நோபல் பரிசு:


நோபல் பரிசானது, உலகின் தலைசிறந்த விருதாக கருதப்படுகிறது. இவ்விருதானது, ஆண்டுதோறும் மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி மற்றும் இலக்கியம் ஆகிய துறைகளில் சிறப்பாக பங்காற்றியவர்களுக்கு இவ்விருது வழங்கப்படுகிறது.


கடந்த 1901ஆம் ஆண்டு முதல், நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்த வேதியியலாளர் ஆல்பிரட் நோபல், மனித இனத்திற்கு மிக பெரிய சேவையாற்றிவர்களுக்கு பரிசு வழங்க வேண்டும் என நினைத்தார். அறிவு, அறிவியல் மற்றும் மனிதநேயம் மூலம் சமுதாயத்தை மேம்படுத்தி மக்களுக்கு உதவ முடியும் என்பதில் நம்பிக்கை வைத்திருந்த அவர், நோபல் பரிசை உருவாக்கினார்.


இதன் காரணமாகவே, இது உலகின் பெருமை மிகு பரிசாக கருதபடுகிறது. இயற்பியல், வேதியியல், மருத்துவம், இலக்கியம் மற்றும் அமைதி ஆகிய துறைகளில் சிறப்பாக செயல்பட்டவர்களுக்கு இந்த பரிசு வழங்கப்பட்டு வருகிறது.


பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு:


இந்நிலையில் 2022 ஆம் ஆண்டில், பொருளாதாரத்திற்கான நோபல் பரிசானது, அமெரிக்காவைச் சேர்ந்த மூன்று பேருக்கு பகிர்ந்து அளிக்கப்படுகிறது. 









எதற்காக தெரியுமா:






வங்கிகள் மற்றும் நிதி நெருக்கடி தொடர்பான ஆய்வுக்காக, அமெரிக்காவைச் சேர்ந்த பென் எஸ். பெர்னாக், டக்லஸ் டைமண்ட், பிலிப் டிவிக் ஆகிய மூன்று பேருக்கு இவ்விருது பகிர்ந்து அளிக்கப்படுவதாக நோபல தேர்வுக் குழு தெரிவித்துள்ளது.