காதலுக்கு கண் இல்லை என்பார்கள். அந்தவகையில் 18 வயது இளம்பெண் ஒருவர் 78 முதியவரை திருமணம் செய்துள்ள சம்பவம் பெரும் வியப்பை ஏற்படுத்தியுள்ளது. 15 வயது முதல் அந்தப் பெண் மூன்று வருடங்களை இவரை காதலித்து திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் ராஷ்ட் மங்காப் என்பவர் வசித்து வருகிறார். 78 வயதான இவர் விவசாய தொழிலை செய்து வந்துள்ளார். இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் திருமணம் ஒன்று நடைபெற்றுள்ளது. அந்த திருமணம் தற்போது பேசு பொருளாக மாறியுள்ளது. அதற்கு காரணம் 78 வயதான ராஷ்ட் மங்காப் 18 வயதான ஹலிமா அப்துல்லாவை திருமணம் செய்துள்ளார். இவர் தன்னைவிட கிட்டதட்ட 60 வருடங்கள் வித்தியாசம் உள்ள பெண் ஒருவரை திருமணம் செய்துள்ள செய்தி பலரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
அத்துடன் இந்த திருமணம் ஒரு காதல் திருமணம் என்பது கூடுதல் சுவாரஸ்யமாக அமைந்துள்ளது. இது தொடர்பாக ராஷ்ட் மங்காப் உறவினர் ஒருவர், “மங்காப் என்னுடைய தந்தையின் சகோதரர். அவருக்கு திருமணமே நடைபெறவில்லை. மூன்று ஆண்டுகளுக்கு முன்பாக எங்களுடைய இல்லத்தில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் இவர் ஹலிமா அப்துல்லாவை முதல் முறையாக சந்தித்தார். அதன்பின்னர் இவர்கள் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த பழக்கம் அவர்களுக்குள் காதலாக மாறியது. 3 ஆண்டுகள் காதலித்து வந்த பிறகு தற்போது இருவரும் திருமணம் செய்துள்ளனர். நீண்ட நாட்களாக திருமணமே செய்து கொள்ளாமல் இருந்த இவர் தற்போது 78 வயதில் முதல் திருமணம் செய்துள்ளார்” எனக் கூறியுள்ளார்.
பிலிப்பைன்ஸ் நாட்டின் சட்டத்தின் படி 21 வயதிற்கு கீழ் உள்ள பெண் திருமணம் செய்ய அனுமதி உள்ளது. ஆனால் அதற்கு ஒரு நிபந்தனை உள்ளது. அதாவது 21 வயதிற்கு கீழ் இருக்கும் பெண்கள் தங்களுடைய பெற்றோர் ஒப்புதல் பெற்று திருமணம் செய்யலாம் என்று உள்ளது. அந்தவகையில் ஹலிமா அப்துல்லா இந்த திருமணத்திற்கு அவருடைய பெற்றோர்களிடம் இருந்து ஒப்புதல் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.