2021ம் ஆண்டுக்கான அமைதிக்கான நோபல் பரிசு இன்று அறிவிக்கப்பட்டது. அமெரிக்க பத்திரிகையாளர் மரியா ரெசா, ரஷ்ய பத்திரிகையாளர் டிமிட்ரி முராடோவ் ஆகிய இருவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. அமைதி, ஜனநாயகத்துக்கான அடிப்படையாக கருத்து சுதந்திரம் இருப்பதை வலியுறுத்திய இருவருக்கும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.அமை






நோபர் பரிசு அறிவிக்கப்பட்ட மரியா ரெஸ்ஸா தனது சொந்த நாடான பிலிப்பைன்ஸில் அதிகார துஷ்பிரயோகம், வன்முறை பயன்பாடு மற்றும் வளர்ந்து வரும் சர்வாதிகாரத்தை வெளிப்படுத்துவதற்கு கருத்து சுதந்திரத்தை பத்திரிகையின் மூலம் பயன்படுத்தியவர். புலனாய்வு இதழியலுக்கான டிஜிட்டல் மீடியா நிறுவனம் மூலம் தொடர்ந்து அதிகார துஷ்பிரயோகத்தை எதிர்த்தவர் நோபல் பரிசு பெற்ற மற்றொருவரான டிமிட்ரி முரடோவ் பல ஆண்டுகளாக ரஷ்யாவில் பேச்சுச் சுதந்திரத்துக்கு ஆதரவாக நின்றவர். பல சவாலான சூழ்நிலைகளிலும் பேச்சு சுதந்திரம் மற்றும் கருத்து சுந்ததிரத்துக்கு பக்க பலமாக இருந்தவர். 1993 ஆம் ஆண்டில், அவர் நோவாஜா கெஜெட்டா என்ற சுதந்திர செய்தித்தாளின் (independent newspaper) நிறுவனர்களில் ஒருவராகவும் இருந்தார்.