சமூக வலைதளங்களில் ஒரு சில இயற்கை பேரிடர்கள் தொடர்பான வீடியோக்கள் வைரலாவது வழக்கம். ஆனால் அதுவே அந்த பேரிடரில் ஒரு சிலர் சிக்கி கொண்டு தப்பிக்கும் வகையான வீடியோக்கள் வெளிவந்தால் அது அனைவரையும் பதற்றம் அடைய செய்யும். அப்படி ஒரு வீடியோ தான் தற்போது வெளியாகியுள்ளது.
அதன்படி அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள கிழக்கு கிராமத்தில் ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இரண்டு தினங்களுக்கு முன் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அப்போது அங்கு இருந்த வீடுகளில் இருந்து வெளியே வர 13 வயது குழந்தை மற்றும் 18 வயது பெண் ஒருவர் முயற்சி செய்துள்ளனர். அவர்கள் இருவரும் ஜன்னல் கதவியிலிருந்து வெளியே தொங்கும் மாதிரி காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. ‘
அதன்பின்னர் அதில் ஒருவர் பக்கத்தில் இருக்கும் பைப்களை பிடித்து கொண்டு மற்றொரு நபருக்கு உதவும் காட்சிகளும் இடம்பெற்றுள்ளன. இந்த தீ விபத்தில் தற்போது வரை ஒருவர் இறந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. எனினும் ஜன்னல் வழியாக தப்பிய இரண்டு பேரும் சிறிய காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அவர்களின் குடும்பத்தில் இருந்த ஒருவர் மட்டும் இந்த தீ விபத்தில் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது.
இந்த கட்டடத்தில் தீ விபத்தை அறிந்து தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று அங்கு இருந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்ந்த்துள்ளனர். அத்துடன் தீயை கட்டுக்குள் கொண்டுவந்துள்ளனர். இந்த திடீர் தீ விபத்து தொடர்பாக காவல்துறையினர் முதற்கட்ட விசாரணையை நடத்தி வருகின்றனர்.
சமூக வலைதளத்தில் இந்த வீடியோவை ஒருவர் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்த வீடியோவை தற்போது வரை 3 லட்சம் பேருக்கு மேல் பார்த்து உள்ளனர். மேலும் பலரும் இந்த இரண்டு பேரின் தைரியத்தை பாராட்டி வருகின்றனர்.
மேலும் படிக்க: இது எப்படி இருக்கு.? இது தொப்பி கலாய்.! ஜித்து ஜில்லாடி, இந்த யானை கில்லாடி..! வைரல் வீடியோ
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
சமீபத்திய லைப்ஸ்டைல் செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் லைப்ஸ்டைல் செய்திகளைத் (Tamil Lifestyle News) தொடரவும்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்